DOMINO 8
கவிஞன் முதலில் தன்னைப் பற்றி எழுதுகிறான்
பிறகு தன் காதலியைப் பற்றி
பின்பு இயற்கையை நோக்கிப் போகிறான்
அதன் பிறகு
தத்துவத்தின் மீது அவன் கண் விழுகிறது
பிரபஞ்சத்தின் ரகசியங்கள் மீது
கவிஞன்
ஒருமுறை
தன் வீட்டிலிருந்து இறங்கி
தெருவில்
காணாமற்போய்விட்டான் எனில்
வீடு திரும்புவதே இல்லை

பனித்துளிக்குள் ஓரு பாற்கடல் 


Reviews
There are no reviews yet.