இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

தாமுவின் சமைப்போம் ருசிப்போம் (கோதுமை - ரவை உணவு வகைகள்)
பச்சை இலைகள்
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
உன் பார்வை ஒரு வரம்
தழும்பு(20 சிறு கதைகள்)
சீர்மல்கு காரைக்கால்
கற்பனைகளால் நிறந்த துளை
அபிமானி சிறுகதைகள்
ரப்பர்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
காராணை விழுப்பரையன் மடல் என்னும் ஆதிநாதன் வளமடல்
முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை
பெண்களுக்கான பல்சுவை குறிப்புகள்
அணங்கு
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
1958
பலசரக்கு மூட்டை
பாரதியார் பகவத் கீதை
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
வண்ணத்துப்பூச்சியும் பச்சைக்கிளியும் பேசிக்கொண்டது என்ன?
நட்பெனும் நந்தவனம்
அறிவியல் வளர்ச்சி வன்முறை
துப்பட்டா போடுங்க தோழி
சாமிமலை
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை பயணம்
புது வீடு புது உலகம்
குமரப்பாவிடம் கேட்போம்
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
நகுமோ லேய் பயலே
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-12)
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
விரட்டுவோம் வறுமையை
திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்?
உழைக்கும் மகளிர்
ஆரிய மாயை
சிறந்த கட்டுரைகள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-7)
அபிதா
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 1)
சுதந்திரத் தமிழ்நாடு ஏன்?
ருசி
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
யாசுமின் அக்கா
ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )
பழமொழி நானூறு
சிறுவர்களுக்கான செந்தமிழ் | Pure Tamil Reader for the Young
திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை
ஏன் இந்த மத மாற்றம்?
திருவாசகம்-மூலம் 


Reviews
There are no reviews yet.