இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

பால்யகால சகி
ராஜ ராகம்
பஷீரின் ‘எடியே’
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
தீராப் பகல்
சிறுகோட்டுப் பெரும் பழம்
பெண்களுக்கான புதிய தொழில்கள்
தலைமறைவான படைப்பாளி
எரியும் பூந்தோட்டம்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 2)
மனம் உருகிடுதே தங்கமே!
இந்தியா தோமா வழி திராவிடக் கிறிஸ்தவ நாடே ... எவ்வாறு?
மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு
நீதிக்கட்சித் தலைவர்களின் சொற்பொழிவுகள்
ஆரிய மாயை
எனப்படுவது
முச்சந்தி இலக்கியம்
வில்லி பாரதம் (பாகம் - 1)
சுந்தர ராமசாமி சிறுகதைகள்
கூத்த நூல்
மேற்கத்திய ஓவியங்கள் II: பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுவரை
நீதிக் கதைகள்
நல்லாரைக் காண்பதுவும்
ஒரு விரல் புரட்சி
அபிமானி சிறுகதைகள்
மருந்துகள் பிறந்த கதை
தி. ஜானகிராமன் சிறுகதைகள்
ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கமும்
நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இந்தியச் சேரிக் குழந்தைகள்
கலைஞரின் பெரியார் நாடு!
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 5) பிரிட்டனின் நேரடிஆட்சிக் காலம்
ஆண்பிரதியும் பெண்பிரதியும்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-13)
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (இரண்டாம் பாகம்)
புறப்பாடு
கணிதமேதை இராமானுஜம்
அற்றவைகளால் நிரம்பியவள்
உன் கையில் நீர்த்திவலை
புலரி
நாலடியார் (மூலமும் உரையும்)
இயற்கையின் விலை என்ன ?
நான் எனும் பேரதிசயம் (வாழ்வைக் கொண்டாடலாம்)
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
கி.ராஜநாராயணன் கதைகள்
தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்
அர்த்மோனவ்கள்
கற்றுக்கொடுக்கிறது மரம்
பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்
பிரதமன்
தலித்துகள் – நேற்று இன்று நாளை
செம்பருத்தி
சைவ இலக்கிய வரலாறு
விக்கிரமாதித்தன் கதைகள்
கல்வி முறையும் தகுதி திறமையும்
புருஷவதம்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -2)
டாக்டர் வைகுண்டம் – கதைகள்
ரப்பர்
அண்ணாவின் மேடைப்பேச்சு
செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு
தாம்பூலம் முதல் திருமணம் வரை
அறியப்படாத தமிழ்நாடு
வலசைப் பறவை
புத்ர, அபிதா, சௌந்தர்ய... லா.ச.ரா. நேர்காணல்கள்
இந்தியாவில் சாதிகள்
ராஜராஜ சோழனின் மறுபக்கம்
சில்மிஷ யோகா
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
மார்க்சிய - லெனினிய தத்துவம்
தலைமைப் பண்புகள்
கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை
மோக முள்
குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்
எங்கே உன் கடவுள்?
பாடலென்றும் புதியது
புதிதாய் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!
ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )
சுந்தரகாண்டம்
ஒற்றன்
உழைப்பவனுக்கும் உற்சாகம்
மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றிய நினைவு குறிப்புகள்
சட்டம் உன் கையில்
இனிய நீதி நூல்கள்
தமிழ்நாட்டுப் பாரம்பரிய கிராமியக் கலைகளும் இசைக்கருவிகளும்
வளம் தரும் வாஸ்து சாஸ்திரம் 


Reviews
There are no reviews yet.