இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை
அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை - ஒரு மறுவாசிப்பு
வைக்கம் போராட்ட வரலாறு
பணத்தோட்டம்
கல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர்
One Hundred Sangam - Love Poems
அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்
வேதாளம் சொன்ன கதை
புதிதாய் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!
சின்ன விஷயங்களின் கடவுள்
இரவின் பாடல் (உலகச் சிறுகதைகள்)
தமிழரின் உருவ வழிபாடு
சிங்கமும் முயலும்
புருஷவதம்
பெரியார் ஒரு சரித்திரம்
மரணத்தின் பின் மனிதர் நிலை
ஒற்றன்
கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம்
துப்பட்டா போடுங்க தோழி
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் வேட்டை (கள ஆய்வு அறிக்கை 2018)
மெட்டீரியலிசம் அல்லது பொருள்முதல்வாதம்
கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்
மொழியைக் கொலை செய்வது எப்படி?
தனியறை மீன்கள்
பெண் குழந்தை வளர்ப்பு
நீதிநூல்கள்
உடைந்த நிழல்
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
பெண் விடுதலை
பெரியாரியம் - கடவுள் (உரைக்கோவை-3)
வெண்ணிற இரவுகள்
நிழல்கள்
பெரியார் - பழமொழிகள் பயன்மொழிகள்
பாரதம் போற்றிய பாரத ரத்னாக்கள்
தமிழ்மொழி அரசியல்
சங்க இலக்கியச் சோலை
நினைவோ ஒரு பறவை
நான் மலாலா - பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை
வேதபுரத்தார்க்கு
ஈழம் - தமிழ்நாடு - நான் (சில பதிவுகள்)
மோகினித் தீவு
பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும்
மொழிப் போரில் ஒரு களம்
நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்
ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கமும்
திருக்குறள் மீட்டெடுப்பில் பண்டிதமணி அயோத்திதாசர் பணிகள்
PIXEL
மாணிக்கவாசகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி 20
ச்சூ காக்கா
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
பிசினஸ் டிப்ஸ்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 7) இந்திரா காலம்
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
பாலியல் வன்முறை: யார் குற்றவாளி?
Lord of Justice Knocked Out (Neethi Devan Mayakkam)
எங்கே உன் கடவுள்?
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
செம்மணி வளையல்
சைவ இலக்கிய வரலாறு
நினைவின் குட்டை கனவு நதி
ரப்பர்
நக்சலைட் இயக்கம் நிழலும் வெளிச்சமும்
பெண்களுக்கான புதிய தொழில்கள்
திராவிடம் அறிவோம்
உலகின் முதல் விண்வெளி விமானிகள்
ருக், யஜுர், ஸாம, அதர்வண வேதங்களும் பத்து உபநிஷதங்களும்
மோகனச்சிலை
கோட்சேயின் குருமார்கள்
எங்கே போகிறோம் நாம்?
தியாகத்தலைவர் காமராஜர்
அரேபியப் பெண்களின் கதைகள்
தமிழ்நாட்டுப் பாரம்பரிய கிராமியக் கலைகளும் இசைக்கருவிகளும் 


Reviews
There are no reviews yet.