இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

விருதுநகர் வணிகத்தால் வளமை பெற்ற வறள்பூமி
நோக்கமும் வழிகளும்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
வாடிவாசல்
திருவாசகம் பதிக விளக்கம்
108 வைஷ்ணவ திருத்தல மகிமை
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
அசோகர்
விற்பனைத்துறையில் அதளபாதாளத்தில் இருந்து வெற்றிச் சிகரத்திற்கு என்னை நான் உயர்த்திக் கொண்டது எப்படி?
Carry on, but remember!
மத்தவிலாசப் பிரகசனம்
சமனற்ற நீதி
BOX கதைப் புத்தகம்
வித்தியாச ராமாயணம்
சாவுக்கே சவால்
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
அராஜகவாதமா? சோசலிசமா? 


Reviews
There are no reviews yet.