இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்
பெரியாரியல் பாடங்கள் (தொகுதி - 2)
அக்னிச் சிறகுகள்
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி – 10)
நீயூட்டனின் மூன்றாம் விதி
உருவமற்ற என் முதல் ஆண்
நலம் தரும் யோகம் (ஆசனம் -பிராணாயாமம் -தாரணை - தியானம்)
பெண் ஏன் அடிமையானாள்?
கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்
சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
ஐஸ்வர்யம் தரும் விரதங்களும் பூஜைகளும்
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி
தனியறை மீன்கள்
உழைப்பவனுக்கும் உற்சாகம்
அரேபிய இரவுகளும் பகல்களும்
மகாத்மா காந்தி படுகொலை: புதிய உண்மைகள்
புலியின் நிழலில்
படச்சுருள் மே 2021 - தனுஷ் சிறப்பிதழ்
உழவர் எழுச்சி பயணம்
கைகள் கோர்த்து...!
சுதந்திரப் போர்க்களம்
குழந்தை வளர்ப்பு சுகமான சுமை
சாதியும் சமயமும்
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
1958
புத்தரும் அவர் தம்மமும்
இலட்சியத்தை நோக்கி
கயிறு (மூன்று பாகங்கள்)
பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்
அரசியல் சிந்தனையாளர் புத்தர்
சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்
நீடிக்கும் வெற்றி
முமியா: சிறையும் வாழ்வும்
மக்கள் விஞ்ஞானி மைக்கேல் ஃபரடே
சித்தர்களின் சாகாக் கலை (மூன்று பாகங்கள் அடங்கியது)
நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்
அற்றவைகளால் நிரம்பியவள்
தமிழ் நாவல் இலக்கியம்
உடல் – மனம் – புத்தி
மலேசியா சிங்கப்பூரில் பெரியார்
உலகை ஆளும் மந்திரம்
கனல் வட்டம்
பம்பாய் சைக்கிள்
புத்தம் வீடு
பெரியார் கருவூலம்
மனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (மூலமும் உரையும் முழுவதும்)
பவித்ரஞானேச்வரி (பாகம் - 2)
நேர் நேர் தேமா
பெண் மணம்
கபீர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தம்மபதம்
பயணம் (உலகச் சிறுகதைகள்)
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
தலைமுறைக்கும் போதும்
குருகுலப் போராட்டம்: சமூக நீதியின் தொடக்க வரலாறு
பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்
பன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு
இரவின் பாடல்
மாப்பசான் சிறுகதைகள்
கடைகள், அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள்
திராவிட நாடு நாட்டமும் நாடாமையும்
அறிவுரைக் கொத்து
தலித் பொதுவுரிமைப் போராட்டம்
அமிர்தம்
இன்னா நாற்பது
மௌனி படைப்புகள்
நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்
மெட்டீரியலிசம் அல்லது பொருள்முதல்வாதம்
குழந்தைகளுக்கான அதிர்ஷ்டப் பெயர்கள் 1000 ( நட்சத்திரப் பொருத்தங்களுடன் )
ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்
ஆயன்
எனக்கு நிலா வேண்டும்
சீனிவாச ராமாநுஜம் கட்டுரைகள்
விடுதலை இயக்கத் தமிழ்ப் பாடல்கள்
அழகிய பெரியவன் கதைகள்
கடல் புறா (மூன்று பாகங்கள்)
ஒரு புளியமரத்தின் கதை
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
திருவாசகம் மூலம்
சாதியும் நானும்
பார்த்திபன் கனவு 


Reviews
There are no reviews yet.