இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

யக்ஞம்
உயிரின் மறுபக்கம்
முக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்
துருவன் மகன்
காணக் கிடைத்த பிரதிகள்
டாக்டர்.டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும்
தப்புத் தாளங்கள்
திராவிட இந்தியா
உருவமற்ற என் முதல் ஆண்
அம்பேத்கர் வழியில் பெரியாரும் தலித் அரசியலும்
ஊத்துக்குளி விசாவும்... அமெரிக்க இட்டேரியும்...
பெரியாரின் பெண்ணியப் புரட்சி
சீர்திருத்தச் செம்மல் பானகல் அரசர்
கொற்கை
மலர் மஞ்சம்
சங்கர மடத்தின் உண்மை வரலாறு
புதுமைப்பித்தன் கதைகள்
சாதி எனும் பெருந்தொற்று: தொடரும் விவாதங்கள்
சிறுநீரக சித்த மருத்துவம்
காலக்கண்ணாடி
ஞான ஒளி வீசும் திருவண்ணாமலையின் ஸ்தல வரலாறு
உதவிக்கு நீ வருவாயா?
பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்
இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-20)
பல்லவர் வரலாறு
அஞ்சனை மைந்தனின் அற்புதங்கள்
புலரி
மணிக்கொடி காலம்: முற்றுப்புள்ளிகளும் காற்புள்ளிகளும்
தமிழ் வேள்வி
நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர்
பெண் எனும் பிள்ளைபெறும் கருவி
இவர்தான் கலைஞர்
சிறிய உண்மைகள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
முதலியார் ஓலைகள்
வணக்கம்
பொய்யும் வழுவும்
மிளகாய் குண்டுகள்
சவராயலு நாயகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
உணவே மருந்து
ஆத்ம ஞானம் அருளும் கந்தரநுபூதி
கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்
ராமாயணம் எத்தனை ராமாயணம்
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
பெண்ணிய இயக்கத்தில் தத்துவார்த்த போக்குகள்'
மணல்
பஞ்சபட்சி சாஸ்திரமும் ஆருடமும்
தெய்வப்புலவர் திருவள்ளுவர்
ஒரு கல்யாணத்தின் கதை
ஆதி இந்தியர்கள் - Early Indians (Tamil)
காணித் தேக்கு
மேடம் ஷகிலா
இந்து தர்ம சாஸ்திரம்
பயன் தரும் பயணங்கள்
அவள் ராஜா மகள்
இந்தியா: காலத்தை எதிர்நோக்கி
திராவிடம் அறிவோம்
நேற்றின் நினைவுகள்
புலியின் நிழலில்
மாணிக்கவாசகரின் திருவாசக அமுதம்
நீதிமன்றங்களில் தந்தை பெரியார்
ருக், யஜுர், ஸாம, அதர்வண வேதங்களும் பத்து உபநிஷதங்களும்
சுமித்ரா
யதி
உலகின் கடைசி மனிதன்
மன்னர்களும் மனு தருமமும்
இந்து சமய தத்துவங்களின் ஞானக்களகஞ்சியம்
பகை வட்டம்
இருள் இனிது ஒளி இனிது
இவன்தான் பாலா
இண்டமுள்ளு
இருளைக் கிழித்தொரு புயற்பறவை
சாதியும் சமயமும்
தேசப்பற்றா? மனிதப்பற்றா?
உணவே மருந்து
பம்மல் சம்பந்த முதலியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அறியப்படாத தமிழ்நாடு
டான்டூனின் கேமிரா
நயத்தகு நாகரிகம்
இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு
மாஃபியா ராணிகள்
சிறகை விரி சிகரம் தொடு
தீரா நதி
ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)
தாய்லாந்து
நெய்தல் கைமணம்
நல்லதொரு குடும்பம்
திராவிடர் இயக்கத்தின் தோற்றமும் - தேவையும்
வந்தாரங்குடியான்
ஆலிஸின் அற்புத உலகம்
திருக்குறளும் பரிமேலழகரும்
இன்று புதிதாய்ப் பிறப்போம்
திருமலை திருப்பதி அரிய தகவல்கள்
கி.ரா.வின் கரிசல் பயணம்
சதுரகிரி யாத்திரை
ஏற்புடைய வாழ்வுக்கான போராட்டம்
சத்திய சோதனை
தமிழ்ப் புலவர் வரலாறு
சைவ இலக்கிய வரலாறு
நல்லனவெல்லாம் தரும் திருவாரூர் மாவட்டத் திருக்கோயில்கள்
கைகள் கோர்த்து...!
பேய்த்திணை
நீர்ப்பழி
தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு - ஒரு பார்வை
பயம் தவிர்ப்போம்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -1)
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம்-2)
கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை
பயணம் (உலகச் சிறுகதைகள்)
நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடிஸ்வரராக ஆகுங்கள்
சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்
தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம் - 1) 


Reviews
There are no reviews yet.