இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

மாலுமி
மொட்டொன்று மலராகிட... (குழந்தை வளர்ப்புக் கலை)
லிபரல் பாளையத்து கதைகள்
மேய்ப்பர்கள்
தமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்
அவலங்கள்
காது கொடுத்துக் கேட்டால் என்ன?
சிவஞானம் பாடிய நுண்பொருள் விளக்கம்
புதுமைப்பித்தன் வரலாறு
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-22)
நுகம்
உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி
ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்
யானை டாக்டர்
என் ஓவியம் உங்கள் கண்காட்சி
இவர்தாம் பெரியார்
சின்ன விஷயங்களின் கடவுள்
இந்திரா செளந்தர்ராஜன்
சார்வாகன் கதைகள்
வடநாட்டில் பெரியார் (பாகம்-1)
உழைக்கும் மகளிர்
பிரிட்டிஸ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்
ஆர். எஸ். எஸ் (இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்)
இராவணன் வித்தியாதரனா?
இறையுதிர் காடு (இரு பாகங்கள்)
குவண்டனமோ கவிதைகள்: கைதிகளின் குரல்
மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு
மீன்கள்
தீண்டாமையை ஒழித்தது யார்?
பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)
கிழிபடும் காவி அரசியல்
தாயார் சன்னதி (திருநவேலி பதிவுகள்)
சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்
சேக்காளி
கோடைகாலக் குறிப்புகள்
புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்
என் உயிர்த்தோழனே
மோகினித் தீவு
பிசினஸ் டிப்ஸ்
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
சிறுவர்களுக்கு மகா பாரதக் கதை
ஓணம் பண்டிகை (பௌத்தப் பண்பாட்டு வரலாறு)
கடவுள் காப்பியம்
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 1
புருஷவதம்
தி.க. சிவசங்கரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மகாத்மா காந்தி படுகொலை: புதிய உண்மைகள்
இராஜேந்திர சோழன்
நகரம்
கச்சேரி
பருவம்
கரை சேர்த்த கட்டுமரம்
மக்கள் விஞ்ஞானி மைக்கேல் ஃபரடே
திராவிட மாயை ஒரு பார்வை (மூன்று பாகங்களுடன்)
சிவ புராணம்
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்
எங்கே போகிறோம் நாம்?
பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழ்மைகள்
புரந்தரதாசர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்
உங்களுக்கு நீங்களே டாக்டர்
புத்தர்
அவஸ்தை (சிறுகதைகள்)
சரித்திரம் படைத்த இந்தியர்கள்
யாக்கை
மோகினித் தீவு
அர்த்தசாஸ்திரம்
மனமெல்லாம் மகிழ்ச்சி
யாமக் கள்வன்
கோவிட்-19 நெருக்கடியும் சூறையாடலும்
காஞ்சன சீதை
ஸ்ரீ கந்தர் சஷ்டிக் கவசங்கள் ஆறு படை வீடுகளுக்கும் உரியவை ஸ்ரீ திருச்செந்தூர் கவசம் உரையுடன் ஸ்ரீ சண்முகக் கவசம் உரையுடன் ஸ்ரீ கந்தர் அநுபூதி உரையுடன்
தந்தை பெரியாரின் முன்னோக்குப் பார்வை
வடசென்னைக்காரி
ஈரணு
செம்பீரா
நீல பத்மநாபனின் 168 கதைகள்
ஈரோடு ஈன்ற பேரறிவாளன்
சுதந்திரப் போர்க்களம்
சுதந்திரத் தமிழ்நாடு ஏன்?
திக்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள்
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் வேட்டை (கள ஆய்வு அறிக்கை 2018)
துப்பட்டா போடுங்க தோழி
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்படும் சமூகநீதி
சாம்பலிலிருந்து பசுமைக்கு: ஆக்சிஜன் மேனிஃபெஸ்டோ
நம்மாழ்வார்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு
சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்
தமிழ்மொழி அரசியல்
அறியப்படாத தமிழ்நாடு
ஊத்துக்குளி விசாவும்... அமெரிக்க இட்டேரியும்...
இலக்கியத்தில் விருந்தோம்பல்
சீனிவாச ராமாநுஜம் கட்டுரைகள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
வயல் மாதா
ஆதனின் பொம்மை (சிந்து முதல் வைகை வரையிலான ஆதனின் பயணம்)
காணித் தேக்கு
திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை
சிலிர்ப்பு 


Reviews
There are no reviews yet.