இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-26)
ஒளவையாரின் ஆத்திசூடி நீதிக் கதைகள்-1
ஆதிதிராவிடர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்
மனவாசம்
ஏழாம் வானத்து மழை
தி.மு.க வரலாறு
எல்லை வீரர்கள்
புயலிலே ஒரு தோணி
நித்தியவல்லியின் கடனக்கழிப்பு
கலங்கிய நதி
புதுமைப்பித்தம் : வாசகத் தொகை நூல் 3
இவர்கள் இல்லாமல் - நவீன அறிவியலின் சிற்பிகள்
நகரம்
இனிய இல்லம் அமைய குடும்ப நல போதினி
தமிழ்மொழிக் கல்வி
சைபீரியா: ஓட்டம் - காத்தியா
ஒரு சொல் கேளீர் (தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்)
உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள்
ஈராக் - நேற்றும் இன்றும்
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)
கதவு திறந்தததும் கடல்
அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி
அற்புதமான களஞ்சியம்
இவன்தான் பாலா
மதமும் மூடநம்பிக்கையும்
முதல் காதல்
கடலுக்கு அப்பால்
கி.ரா.வின் கரிசல் பயணம்
ஏவாளின் நாட்குறிப்பு: மூலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது
இலக்கிய வரலாறு
நாவல் பழ இளவரசியின் கதை
நுழை
மருத்துவ டிப்ஸ்
நயனக்கொள்ளை
உண்மை விளக்கம் (உரை நூல்)
யாசகம்
ஆடு ஜீவிதம்
பெண் மணம்
நிச்சயதார்த்தம்
ஒரு புளியமரத்தின் கதை
மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?
துளசி பூஜா விதிகளும அர்ச்சனையும்
உயிரோடு உறவாடு
பள்ளிக்கூடத் தேர்தல்
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 3)
பொய்த் தேவு
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6
மெய்நிகர்
நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர்
ஆக்காண்டி
அறியப்படாத தமிழகம்
பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?
பெற்ற மனம்
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
காதலின் புதிய தடம்
தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை
காந்தியைச் சுமப்பவர்கள்
திரும்பிப் பார்க்கையில்
ருக், யஜுர், ஸாம, அதர்வண வேதங்களும் பத்து உபநிஷதங்களும்
புதுமைப்பித்தன் வரலாறு
குழந்தைகளின் மன நல/உடல் நல வளர்ச்சிக்கான பெற்றோர்களின் கையேடு
மேடம் ஷகிலா
திராவிட இந்தியா
தம்மபதம்
ஜே.பி.சந்திரபாபு திரையிசைப் பாடல்கள்
மார்த்தாண்ட வர்ம்மா
பாரதியார் கவிதைகள்
பொய்மான் கரடு
புரோகிதர் ஆட்சி
பட்டாம்பூச்சி விற்பவன்
எரியும் பூந்தோட்டம்
என்னைச் சந்திக்க கனவில் வராதே
சைதன்யர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பாரதியார் பகவத் கீதை
ஏற்புடைய வாழ்வுக்கான போராட்டம்
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
கொட்டு மேளம்
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
சுஜாதாவின் கோனல் பார்வை
கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை (அடித்தள மக்கள் குழுவாக்கம் - ஒரு மீள்பார்வை)
இந்துக்கள் ஒன்றுசேர முடியுமா?
கனல் வட்டம்
அறிந்ததினின்றும் விடுதலை
தேரி காதை: பௌத்தப் பிக்குணிகளின் பாடல்கள்
கிருஷ்ணதேவ ராயர்
மோகனச்சிலை
சிரி.. சிரி.. சிறகடி! 


Reviews
There are no reviews yet.