இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

ஆபத்தில் கூட்டாட்சி
இராஜ யோகம் தரும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி
தீ பரவட்டும்
மலைக்கள்ளன் (1942இல் சிறையில் உருவான கதை)
சோதிட ரகசியங்கள்
மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்
எல்லோருக்குமானவரே
மெய்நிகர்
எஞ்சும் சொற்கள்
தாய்லாந்து
பிடிமண்
இரயில் புன்னகை
சொற்களைத் தவிர வேறு துணையில்லை
மனிதனும் தெய்வமாகலாம்
ஒரு நகரமும் ஒரு கிராமமும்
இளைய சமுதாயம் எழுகவே
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
என் சரித்திரம்
பிறகு
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-12)
சிறு புள் மனம்
மாவீரர்களின் மறைக்கப்பட்ட வரலாறு
உப்புச்சுமை
மஹாபாரதம்
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
புதியதோர் உலகம் செய்வோம்
பெண் ஏன் அடிமையானாள்? (HB)
அவளது வீடு
மருந்துகள் பிறந்த கதை
காமராசர் கொலை முயற்சி சரித்திரம்
புரட்சியாளன்
திராவிட சிந்துக்கள் – பார்ப்பன இந்துத்துவம் இரண்டும் ஒன்றா?
தொ. பரமசிவன் நேர்காணல்கள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 9)
சொந்தம் எந்நாளும் தொடர்கதைதான்
வஞ்சியர் காண்டம்
போராட்டம் தொடர்கிறது
உற்சாக டானிக்
உள்பரிமாணங்கள்
உண்மை விளக்கம் (உரை நூல்)
லாவண்யா
முஸ்லிம் அடையாளம்- இந்துத்துவ அரசியல்
இருளைக் கிழித்தொரு புயற்பறவை
உன்னை நான் சந்தித்தேன்
இந்தியா 1944 - 48
நமது குறிக்கோள் தொகுதி - 2
மகாபாரதத்தில் வர்ண(அ) தர்மமும் பெண்ணடிமையும்
அந்தக் காலத்தில் காப்பி இல்லை
பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்
வழி வழி பாரதி
இலக்கணச்சுடர் இரா. திருமுருகன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தமிழகத்தில் ஆசீவகர்கள்
பல்லவர் வரலாறு
இறவான்
சிவஞானம் பாடிய நுண்பொருள் விளக்கம்
எனும்போதும் உனக்கு நன்றி
டாக்டர் வைகுண்டம் – கதைகள்
கரகரப்பின் மதுரம்
தமிழ்நாடன் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மணிக்கொடி காலம்: முற்றுப்புள்ளிகளும் காற்புள்ளிகளும்
மார்க்ஸ் ஏங்கெல்ஸ் பற்றிய நினைவுக் குறிப்புகள்
யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
ரப்பர்
நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
காகிதப்பூ தேன்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)
கர்னலின் நாற்காலி
அசோகமித்திரன் குறுநாவல்கள்
இரண்டாவது காதல் கதை
இந்துக்கள் ஒன்றுசேர முடியுமா?
பசி
நாத்திகனின் பிரார்த்தனைகள்
பாண்டியன் பரிசு
பாவலரேறு பெருஞ்சித்திரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஜமீலா
நயனக்கொள்ளை
அழியாத கோலங்கள்
பம்பாய் சைக்கிள்
பெரியாருக்கு முன் அயோத்திதாசப்பண்டிதர் எழுத்துச் சீர்திருத்தம் - ஓர் ஆய்வு
பட்டக்காடு
மேய்ப்பர்கள்
பிரயாணம்
பசி
நீர் அளைதல் 


Reviews
There are no reviews yet.