கோவை மு.கண்ணப்பன் வாழ்வும் பணியும்:
அவர் மத்திய ‘ராஜாங்க அமைச்சராக’ (Independent Charge) இருந்தபோது, அவரது பொறுப்பும், கடமையும் இந்தியாவில் மரபுசாரா மின் சக்தியைத் தந்து இருட்டை விரட்டும் ஒளியூட்டும் பணி!
முறைப்படி மின்சார இணைப்புகள் செய்ய முடியாத பகுதிக்கெல்லாம் குக்கிராமங்கள், மலைவாழ் மக்களுக்குப் புத்தொளி தந்து சாதனை படைத்தவர்.
அவர் இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருந்தபோது தான், ‘மானமிகு சுயமரியாதைக்காரரான’ கலைஞரின் அரசால், இவரது துறையின் மூலம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கப்படவேண்டும் என்ற தனிச்சட்டம் – தந்தை பெரியாரின் விருப்பத்தை நிறைவேற்றும் சட்டம் – உச்ச நீதிமன்றத்தாலும் செல்லும் என்று தீர்ப்பு கூறப்பட்ட சட்டம் வந்தது!
– கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
நூலின் பின் இணைப்பில் கண்ணப்பரின் சட்டமன்ற உரைகள், கட்டுரைகள் வினா-விடைகள் வாழ்க்கைக் குறிப்புகள் இடம்பெற்று இருக்கின்றன. இந்நூலினை இன்று திமு. கழகத்தில் இளைஞர்களாய் இருப்பவர்கள் படித்தறிய வேண்டும். தமிழ்நாட்டில் மேற்கு மாவட்ட ஊர்களில் ஒன்றான பொள்ளாச்சியில் கண்ணப்பர் என்கிற மாணாக்கனை ஈர்த்த தி.மு.கழகத்தை அவர், ‘பிடித்தப் பிடி விடாமலேயே’ கடைசிவரை கொள்கை வயமாய் வளர்ந்ததை அறியலாம். போராட்டமா? சிறையா? எதிர்க்கட்சிகளோடு விவாதமா? அறிவார்ந்த பேச்சா? அரிய செய்திகளை அறிதலா எதுவானால் என்ன அனைத்தையும் சந்தித்துக் களம் காண்பதில் மகிழ்ச்சி அடைந்த ஒரு திராவிட இயக்கத் தலைவரை இந்நூலினுள் சந்திக்கிறோம்.
– க.திருநாவுக்கரசு வரலாற்று ஆய்வாளர், மயிலை.

மாபெரும் தமிழ்க் கனவு 
Reviews
There are no reviews yet.