Perumarangal Vizhumpozhuthu
பொது நீரோட்டத்தின் மறக்கப்பட்ட சூழல்களிலிருந்து ஓரங்கட்டப்படும் பிரத்தியேகப் பிரிவினரின் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் குறித்து மாதவனின் கதைகள் பேசுகின்றன. ஏற்றுக் கொள்ளப்பட்ட மாற்று வாதங்களின் அரசியல் மொழியோ திட்டமோ இவற்றுக்கு இல்லை. வன்முறை வேட்கைக்கும் சுரண்டலுக்கும் ஒதுக்கப்படுதலுக்கும் இயலாமைக்கும் இரையாகும் சமூகக் கூட்டத்தின் வாழ்க்கையே இந்தக் கதைகளில் ஊடுருகின்றன.
– டாக்டர் பி.கே. ராஜசேகரன்
(இலக்கிய விமர்சகர்)
சம கால மலையாள இலக்கியத்தில் நவீனத்துவம் பெரும் வீச்சை நிகழ்த்திய எழுபதுகளில் அறிமுகமானவர் என்.எஸ்.மாதவன். நவீனத்துவத்தை அடியொற்றி இயங்கியவர். எனினும் அதன் பொதுப் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சிறுகதைகள் மூலம் தன்னை நிறுவிக்கொண்டவர்.
மாதவனின் கதைகள் வெறும் புனைவுகளல்ல; வரலாற்று இடையீடுகள். அல்லது வரலாற்றை ஓர் எழுத்தாளனின் நோக்கில் பரிசீலனை செய்யும் எத்தனங்கள். புராணிகங்களிலும் பழைய சரித்திரத்திலும் நிகழ்கால வரலாற்றிலும் பங்கேற்கும் பாத்திரங்களை இன்றைய பின்புலத்தில் விசாரிப்பவை அல்லது சமகால உலகத்துடன் அந்தப் பாத்திரங்களை எதிர்கொள்ள வைப்பவை மாதவனின் கதைகள். சரியாகச் சொன்னால் வரலாறு இல்லாதவர்களும் வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டவர்களும் நடத்தும் சரித்திர விசாரணையே இந்தக் கதைகள்.
தன்னுடைய சிறுதைகளில் தனக்குப் பிடித்தவையாக என்.எஸ். மாதவனே தேர்ந்தெடுத்த பன்னிரண்டு கதைகளின் தொகுப்பு இந்நூல்.
Reviews
There are no reviews yet.