அம்மா வந்தாள்
தி. ஜானகிராமன்
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர் களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.

இரவல் சொர்க்கம்
உறவுகள்
சுலோசனா சதி
வேங்கை வனம் (வரலாற்று நாவல்)
மரணத்தின் பின் மனிதர் நிலை
இரும்பு பட்டாம் பூச்சிகள்
வில்லி பாரதம் (பாகம் - 4)
சிறுவர்களுக்கான செந்தமிழ் | Pure Tamil Reader for the Young
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
வெற்றித் திருநகர்
தோகை மயில்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)
பொன்னர் - சங்கர்
சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு
பிற்காலச் சோழர் வரலாறு
அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)
கீழடியில் கேட்ட தாலாட்டுகள்
பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
யோகநித்திரை அல்லது அறிதுயில்
வில்லி பாரதம் (பாகம் - 1)
அந்தரங்கம் 


அம்மு ராகவ் –
#அம்மா_வந்தாள்
#திஜானகிராமன்
வேதத்தை தவிர வெளியுலகம்
எதுவும் தெரியாமல் வளர்ந்துவிட்டு, அம்மா, தோழி
என்று இரு பெண்களின் மனஉணர்வுகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் அப்பு….
நானாவது உன்னையே நினைச்சுட்டு சாகறேன்,
உங்கம்மா யாரையோ நினைச்சுட்டு சாகாம இருக்கா என்று கதறும்…
சிறுவயதிலிருந்தே அப்புவை நேசித்துக்கொண்டிருக்கும் கைம்பெண்ணான இந்து.
தன் மனைவியையே ஒரு முறையாவது இவளை கட்டியாள வேண்டும்னு நினைக்கிற தண்டபானி…
கணவனானாலும் சரி, சிவசுவானாலும் சரி எவனும் தன்னை ஆள முடியாது என தானே தன்னை ஆளும் பெண்ணாக, கம்பீரமாக நிற்கும் அழகான ஆளுமை அலங்காரம்…
ஒரு பெண்ணை ஆள வேண்டுமென எவன் நினைக்கிறானோ, அவனை அப்பெண் ஆண்டுகொண்டிருக்கிறாள்…அதுதான் உண்மை.
ஒரு கட்டத்தில் கணவனுடனான தாம்பத்தியத்தை நிறுத்திக் கொள்ள, போறும்னா போறும்தான்…என்று
60 களிலேயே தன் கணவனை பார்த்து No means No என்று சொல்ல ஒரு பெண்ணுக்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும். அலங்காரம் மட்டுமல்ல தி.ஜா வின் கதாநாயகிகள் ஒவ்வொருவரும்
பிரம்மிக்க வைக்கிறார்கள் என்னை…..
#அம்முராகவ்