அந்தமான் சிறை அனுபவங்கள்

Publisher:
Author:

Original price was: ₹650.00.Current price is: ₹625.00.

Out of stock

Anthaman Sirai Anubavangal

Savarkar

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வேறு எந்த தேசியத் தலைவரைக் காட்டிலும் அதிகக் கொடுமைகளையும் சித்திரவதைகளையும் அனுபவித்தவர் சாவர்க்கர். அதே சமயம், தீவிரமாக விமரிசிக்கப்படுபவராகவும் அதிகம் வெறுக்கப்படுபவராகவும்கூட அவரேதான் இருக்கிறார்.  உச்ச நீதிமன்றமே விடுவித்த பிறகும்கூட இன்றுவரை அவர் பெயர் மகாத்மா காந்தி படுகொலையோடு திட்டமிட்டுத் தொடர்புபடுத்தப்படுகிறது.சாவர்க்கர் பற்றிய அத்தனை அவதூறுகளுக்குமான ஒரே வலுவான பதில், அவருடைய வாழ்க்கைதான். இந்தப் புத்தகம்  தமிழில் முதல்முறையாக சாவர்க்கரின் வீரஞ்செறிந்த போராட்ட வரலாற்றை விரிவாக அறிமுகம் செய்து வைக்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் அவர் வகித்த பாத்திரம் என்ன என்பதையும், தேசத்துக்காகவும் மக்களுக்காகவும் அவர் புரிந்த தியாகங்கள் என்னென்ன என்பதையும் துல்லியமாகவும் உணர்வுபூர்வமாகவும் விவரிக்கிறது.இரட்டை ஆயுள் தண்டனை பெற்று அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட சாவர்க்கர் தான் சந்தித்த அத்தனை துயரங்களையும் உள்ளது உள்ளபடி இதில் பதிவு செய்திருக்கிறார். உள்ளம் பதறாமல், கண்ணில் நீர் துளிர்க்காமல் இதை ஒருவராலும் வாசிக்கமுடியாது. சாவர்க்கரை மட்டுமல்ல, இந்திய வரலாற்றின் கொந்தளிப்பான ஒரு காலகட்டத்தையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது இந்நூல்.1927ம் ஆண்டு மராத்தியில் வெளிவந்த சாவர்க்கரின் இந்த நூல், 1949ல் ஆங்கிலத்தில் ‘My Transportation For Life’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. இதன் அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பு இந்தப் புத்தகம்.

Delivery: Items will be delivered within 2-7 days