1 review for அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை – ஒரு மறுவாசிப்பு
Add a review
You must be logged in to post a review.
Original price was: ₹135.00.₹128.00Current price is: ₹128.00.
சோழர் ஆட்சியில் சைவம் செழித்தது என்றால் அது உண்மையா? உண்மை என்றால் அது என்ன சைவம்? சித்தாந்த சைவமா? வைதீகச் சைவமா? சோழர்கள் எந்தப் பக்கம் இருந்தார்கள்? சைவத்தின் சரிவிற்கு நாயக்கர்களின் வைணவ ஆட்சிதான் காரணமா? சிவ வழிபாட்டை விட முருகன் வழிபாடு நாயக்கர் ஆட்சியில் மேலோங்கியது ஏன்? இப்படிக் கேள்விகள் எழுகின்றன! பதில் தேடி சோழர்கள் ஆட்சிக்குள் புகுவோம்!
Delivery: Items will be delivered within 2-7 days
ART Nagarajan –
“அருணகிரி நாதர் முதல்
வள்ளலார் வரை”
ஒரு மறுவாசிப்பு
சிகரம்.ச.செந்தில்நாதன்
புதுமைப்பித்தன்பதிப்பகம்
பக்தி இலக்கியங்களின்
தோற்றம் ஏன் நிகழ்ந்தது,
அதன் வரலாற்று,
சமூக, பொருளாதாரப்
பின்னணி என்ன,
பக்தி இலக்கியங்களில் ஆண்டவனும், ஆகமும்
மட்டுமல்ல,
அன்றைய
சமுதாய கட்டுமானமும்
தெரிகிறது!
சோழர்கள் ஆட்சியில்
சைவம் செழித்து என்றால்
அது உண்மையா?
உண்மை என்றால்
அது என்ன சைவமா?
சித்தாந்த சைவமா?
வைதீகச் சைவமா?
சோழர்கள் எந்தப் பக்கம் இருந்தார்கள்?
சைவத்தின் சரிவிற்கு நாயக்கர்களின்
வைணவ ஆட்சிதான்
காரணமா?
சிவ வழிபாட்டைவிட
முருகன் வழிபாடு
நாயக்கர்கள் ஆட்சியில்
மேலோங்கியது ஏன்?
இந்த கேள்விகளுக்கு
பதில் தேடி
இந்தப் புத்தகத்தின் வழியாக
சோழர்கள் ஆட்சியில் புகுவோம்!
தமிழகத்தில்
பக்தி இலக்கியங்களில்
அரசியல் வரலாற்றை
மிக நுட்பமாக வரிசைப்படுத்தி காலத்தின் கண்ணாடியாக நூலாசிரியர் தந்துள்ளார்!
இஸ்லாமியர்கள் வருகை,
நாயக்கர்களின் ஆட்சி,
ஆற்காட்டு நவாபுகள்,
மராட்டியர்,
அருணகிரி நாதர்,
தாயுமானவர்,
சித்தர்கள்,
சைவ மடங்கள்,
குகையிடிக் கலகம்,
சைவ சித்தாந்த நூல்கள்,
வீரசைவ ஆதீனங்கள், குமரகுருபரர்,
சிவப்பிரகாசர்,
நிகம வழிபாடு,
வைணவத்தின் நிலை,
வள்ளலார் ஜோதியோடு
ஐக்கிய மானது எப்படி
என்பது வரை விரிகிறது!
நூலின் வாசிப்பு முடிந்ததும்
தமிழகத்தில் மதங்களைப் பற்றிய
தெளிவான சிந்தனையை பெறுகிறது!
அருமையான நூல்!!
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
வாசகர் வட்டம் மதுரை
ART.நாகராஜன்
04.04.2020.