Idhu Karuppargalin Kaalam
பதினேழாம் நூற்றாண்டு தொடங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை கருப்பின மக்கள் கிட்டத்தட்ட நூறு கோடி பேர் உலகமெங்கும் சிதறடிக்கப்பட்டார்கள்.
அடிமைகளாக, விற்பனைப் பொருள்களாக, பண்டமாற்றுப் பொருள்களாக, பாலியல் பண்டங்களாக இன்னும் எத்தனை வன்கொடுமை வடிவங்கள் இருக்கிறதோ அத்தனையும் அவர்கள் மீது ஏவப்பட்டது. அத்தனையும் மீறி தங்கள் இருப்பை, தங்கள் கலையை, தங்கள் பண்பாட்டை, தங்கள் வரலாற்றை மீட்கவும் உயிர்ப்போடு வைக்கவும் போராடி ஜெயித்தவர்கள் கருப்பின பூர்வகுடிகள். கட்டாயமாக புலம்பெயர வைக்கப்பட்ட நிலங்களிலும் தங்கள் உரிமையைக் காக்க கலையையும் இலக்கியத்தையும் ஆயுதமாகக் கைக்கொண்டார்கள். இதன் மூலம் பிறரது கலையைப் பின்பற்றியவர்கள் தங்கள் கலையை பிறரைப் பின்பற்ற வைத்தார்கள். வரலாற்று ஓர்மையோடு, கழிவிரக்கம் கோராத, வெற்றுக் கோபங்களைத் தவிர்த்த ஒரு பிரபஞ்சம் தழுவிய எழுத்து வடிவை தொடர வேண்டிய சூழல் என்று உருவாகியிருக்கிறது. இதை ஆப்பிரிக்கக் கவிஞர்கள் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். இதைப் பின்பற்றி தமிழில் தலித் கவிதைகள் தங்கள் பாடுபொருளை, வடிவத்தை அகலப்படுத்திக் கொள்ளலாம் என்பதே இத்தொகுப்பின் நோக்கம்
Reviews
There are no reviews yet.