IRAVA SIDHDHARIN SIRANJEEVI MARUTHTHUVAM
இறவா சித்தரின் சிரஞ்சீவி மருத்துவம் சிந்தையை உள்ளடக்கி சுழுமுனை தன்னை நோக்கி தியானித்தால் ஆகாய கற்பம் தானே கிடைக்கும். இந்த ஆகாய கற்பத்தை நாளும் உண்டு வந்தால் மரணமிலாப் பெருவாழ்வு வாழலாம் என்கின்றனர் சித்தர்கள்.பேச்சேது கற்பமுண்டால் திரேகந்தானும் பிலத்ததடா நரைதிரையும் ஓடிப்போகும்’என்கிறது சித்தர் பாடல். நோயுற்ற துன்பமும் நோயற்ற இன்பமும் பிறரால் தனக்குக் கிடைப்பதில்லை; மனிதன் தனக்குத்தானே தேடிக்கொள்வது. சித்த மருத்துவத்தை மறைவாகக் கூறாவிட்டால் அதன் சிறப்பினால் இறந்தவனும் உயிர் பெற்றிடக்கூடும். அவ்வாறு செத்தவர் எல்லாம் திரும்பிவந்தால் உலகில் இடங்கொள்ளாமல் போகும்! அதன் காரணமாகவே சித்தர்கள் மருத்துவ நூல்களில் பரிபாஷைச் சொற்களை அதிகம் நிரப்பியுள்ளனர்.சித்த மருத்துவத்தில் மனிதருக்கு உண்டாகும் நோய்கள் யாவுமே வாதம், பித்தம், சிலேத்துமம் என்ற மூன்றில் அடங்குகிறது. இம்மூன்றும் நோயின் மூன்று முகங்களில் பார்க்கப்படுகிறது.சிரஞ்சீவியாக வாழும் ஆசை யாரைத் தீண்டவில்லை?’ சரி.. அதற்கான சித்தமார்க்கம் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம் வாருங்கள்…
Reviews
There are no reviews yet.