(Kalavara Pallaththaaku Kashmir)
கடந்த 70 ஆண்டுகளாக தொடரும் காஷ்மீர் மக்களின் தொடர் போராட்டம் ஏன்? கொலையானவர்கள்… ஆயிரக்கணக்கிலா? லட்சக்கணக்கிலா? காணாமல் போனவர்கள் எண்ணிக்கை யாருக்காவது தெரியுமா? ஜம்மு காஷ்மீரில் இன்று 7 லட்சத்து 50 ஆயிரம் இந்திய ராணுவம், துணைராணுவப்படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதாவது, காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் தொகையில் சுமார் 7 பேருக்கு ஒரு ராணுவ சிப்பாய் என்கிற விகிதத்தில். பல்லாண்டுகளாக இதே நிலைமை. ஒருபக்கம் பாகிஸ்தான் காஷ்மீரை பிரச்சனைக்குரியப் பகுதி என்கிறது, மறுபக்கம் இந்தியா தனது பிரிக்க முடியாத பகுதி என்கிறது. 70 ஆண்டுகளாக காஷ்மீர் அதிகார போட்டியின் அரசியல் களமாக ரத்தம் சிந்துகிறது. என்ன தான் நடக்கிறது காஷ்மீரில்? ஒற்றைக்கேள்வி! பதில் ஒன்று தான்! “காஷ்மீர் மக்களிடம் கேளுங்கள்” என்பதே அந்த பதில். இந்த புத்தக ஆசிரியர் பாலகோபால் காஷ்மீர் மக்களை சந்தித்து அவர்களிடமிருந்து கேட்டிருக்கிறார். உண்மைகளைத் தேடி சென்றிருக்கிறார். வரலாற்று உண்மைகளை ஆராய்ந்திருக்கிறார். உண்மைகளைத் தொகுத்து பதிவிட்டிருக்கிறார். அவரின் ஒவ்வொரு பதிவிலும் அரசின் புனைவுகள் ஒவ்வொன்றாக, வரலாற்று ரீதியாக உடைபடுகின்றன. ஒடுக்கபட்ட மக்களின் கண்கொண்டு இந்த பிரச்சனையை அவர் அனுகியிருக்கிறார். ஆகவே இந்தப் புத்தகம் காஷ்மீர் மக்களின் குரலில் பேசுகிறது.
Reviews
There are no reviews yet.