நான் இந்துவல்ல நீங்கள்?
தொ. பரமசிவன்
உலகமயமாக்கல் என்ற பேரில் பன்னாட்டு மூலதனம் தருகின்ற நெருக்கடியில் எளிய மக்களின் வாழ்க்கை துவண்டு போய்க் கிடக்கின்றது. இந்த நேரத்தில் மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக மற்றொரு பக்கத்தில் இந்து அடிப்படைவாதிகள் ஆரவாரக் கூச்சல் இடுகிறார்கள். ‘இந்து’ என்ற சொல்லும் அதனடிப்படையும் வெகு மக்களுக்கு எதிரானவை. ஆனால் படித்த நகர்ப்புறம் சார்ந்த, வறுமைக்கோட்டினை அடுத்து இருக்கின்ற மக்கள் ‘இந்து’ என்ற சொல்லில் ஏமாந்து போகிறார்கள். கிறித்தவர் என்பது போல இசுலாமியர் என்பது போல ‘இந்து’ என்பதும் ஒரு அடையாளம் என்று நினைக்கின்றனர். ஆனால் பெருவாரியான மக்களுக்கு சாதி என்னும் கொடுமையான அடையாளம் தான் உண்மையானதாக இருந்து வந்திருக்கிறது. மத அடையாளம் எல்லாம் மேல் சாதிகளுக்குத்தான். இந்து அடையாளம் குறித்து சில பேராசிரியர்களிடம் கருத்துக் கேட்டோம். அவர்கள் தந்த விளக்கம்தான் இந்த சிறு வெளியீடு ஆகும். இந்து என்று தன்னை நம்புகின்ற அப்பாவி மக்களை நோக்கியே இந்த விளக்கங்கள் தரப்படுகின்றன. (நூலின் முன்னுரையிலிருந்து)
Reviews
There are no reviews yet.