NADIKAIGALIN KADHAI
வெளிச்சத்தில் தெரியும் பிரபலங்களின் முகங்களை நாம் பார்க்கிறோம். அதன்பின்னால் இருக்கும் அவர்களின் சொந்த வாழ்க்கையில் கிசுகிசுக்களைத் தாண்டி மற்றவை பற்றி பெரும்பாலானவர்கள் சுவாரசியம் காட்டுவதில்லை. ஆனால் அவர்களின் சொந்த வாழ்க்கையிலும் மற்றவர்கள் போலவே மகிழ்ச்சியான தருணங்களும் துன்பச் சூறாவளிகளும் இருந்தன. எளிய மனுஷியாக அப்படிப்பட்ட தருணங்களை எதிர்கொண்ட புகழ்பெற்ற நடிகைகளின் வாழ்க்கைச் சம்பவங்களை கட்டுரைகள் ஆக்கியிருக்கிறார் யுவகிருஷ்ணா.
தேவி சாயலில் பரபரப்பாக அறிமுகமாகி, இந்தியாவின் பல முன்னணி ஹீரோக்களோடு இணைத்துப் பேசப்பட்ட திவ்யபாரதி தனது 19 வயதில் மர்மமாக மாடியிலிருந்து விழுந்து மரணித்த கதை… ஒரே படத்தில் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்து, அலட்சியமாகத் திரையுலகை அணுகிப் பார்த்து வெற்றிகளைக் குவித்து, மணிரத்னத்தின் ‘திருடா திருடா’ படம் மூலம் தமிழுக்கும் வந்து ‘கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு’ என ஆடிய அனு அகர்வால் ஒரு விபத்தில் சிக்கி கோமாவுக்குச் சென்று, தான் யார் என்பதே அறியாமல் இப்போது வாழ்ந்து வரும் இன்னொரு வாழ்க்கை… இப்படி தேவதைகள் பலர் தரையில் இறங்கி நடந்த தருணங்கள் படிக்கப் படிக்க நெகிழச் செய்பவை!
இந்த நூலின் தலைப்பில் வேண்டுமானால் ‘கதை’ இருக்கலாம். ஆனால், இங்கே விவரிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் நூறு சதம் நிஜம்.
Reviews
There are no reviews yet.