மூன்று வெவ்வேறு தளங்களில் பயணிப்பதன் மூலம் தமிழ்தேசிய வீரயுகக் கனவை நேரடி புனைவாகச் சித்தரிக்கிறார் வேல்முருகன் இளங்கோ.
தமிழின விடுதலைப் போராட்டத்தின் ஆயுதம் தாங்கிய தசாப்தங்கள் முடிவுக்கு வந்த பின்பு நூற்றாண்டுகளைக் கடந்து முன்னோக்கிச் சென்று மீண்டுமொரு ஆயுதம் தாங்கிய போர்க்களத்தைக் கட்டமைக்கிறார்.
இதில் உள்ளீடாக நச்சுக் கழிவுகளை எவ்வித தயக்கமுமின்றி நீரிலும் நிலத்திலும் காற்றிலும் கலந்துவிடும் ஆலைகளுக்கு எதிராக திரளும் மக்கள் போராட்டங்களும் ,அதன் பின்னணிகளும் கதைக்களமாகின்றன. எல்லாவற்றுக்கும் மேல் இந்த நூற்றாண்டில் தங்களது புதிய அரசியல் இலக்கைத் தீர்மானித்த இளையோர்களின் மனமும் சூழலும் நகர்வுகளும் இந்நாவலின் பலம்.
– எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி
Reviews
There are no reviews yet.