கியோசாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என்பவற்றை விபரமாக இந்நூல் விபரிக்கிறது.
புத்தகத்தில் காணப்படும் தலைப்புகளில் சில வருமாறு:
நிதி பற்றிய அறிவின் பெறுமதி
நிறுவனங்கள் செலவழித்ததன் பின்னரே வரிகளை செலுத்துகின்றனர், அதேவேளை தனிநபர்கள் முதலில் கட்டாயம் வரியைச் செலுத்த வேண்டும்.
நிறுவனங்கள் எனப்படுபவை, அனைவரும் பயன்படுத்தக்கூடிய செயற்கையான அமைப்புகள், ஆனாலும் ஏழைகள் அதை எப்படி பயன்படுத்தலாம் என தெரியாதவர்கள்.
கியோசாகி மற்றும் லேச்ட்டர் ஆகியோரின் கருத்துக்களின் படி, உங்கள் சொத்துகளிலிருந்து வருமானம் எத்தனை நாள்களுக்கு உங்கள் வாழ்வாதாரமாக இருக்க முடியுமென்பதைக் கொண்டே உங்கள் செல்வம் அளவிடப்படும் என்பதாகும். உங்களின் மாதாந்த வருமானம், உங்களின் மாதாந்த செலவை மிஞ்சுகின்ற போதே, செல்வம் அளவிடப்படுவது எனப்படுவது, நிதி நிலைமைகளில் நீங்கள் தன்னிறைவு அடைதல் சாத்தியமாகும். இந்த நூலில் வருகின்ற கதாபாத்திரங்களான இரு தந்தைகளும் தங்கள் மகன்களுக்கு இந்த விடயங்களை கற்பிக்க வெவ்வேறான வழிமுறைகளைக் கையாண்டனர்.

மு.க - வெறும் வாழ்க்கை வரலாறல்ல, ஒரு Scan report
108 - திவ்ய தேச உலா (பாகம் - 1)
21 ம் விளிம்பு
2700 + Biology Quiz
2800 + Physics Quiz
16 கதையினிலே
A Madras Mystery
5000 பொது அறிவு
Red Love & A great Love
Bastion
ARYA MAYA - The Aryan Illusion
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
Compact DICTIONARY Spl Edition
HINDU NATIONALISM
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
Arya Maya (THE ARYAN ILLUSION) 
kodeeswaran –
நம் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படங்களில் பொதுவாக ஒரு வசனம் சொல்லப்படும் ” RICH GET RICH , POOR GET POOR”. இதற்கான பதிலை கேட்டால், உழைப்பு என்று சொல்லுவார்கள். உழைப்பதனால் அவர்கள் பணக்காரர்கள் ஆகிறார்கள்.. அப்படி என்றால் ஏழைகள் உழைப்பது இல்லையா! எனக்குத் தெரிந்து, இங்கே அதிகம் உழைப்பவர்கள் ஏழைகள்தான். அப்படி இருக்கையில் எப்படி பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்கள் ஆகிறார்கள்.. ஏழைகள் இன்னும் ஏழைகள் ஆகிறார்கள்.! இருவருமே உழைக்கிறார்கள். ஆனால், ஏன் இந்த வேறுபாடு. இருவரும் எதில் விதியாசப்படுகிறார்கள். இது ஒரு BILLION DOLLAR QUESTION. இதற்கான விடையைத் தன் இரு தந்தைகள் மூலம் பயின்று, செயல்படுத்தி, வெற்றி கண்டு, அந்த சூத்திரத்தை “பணக்கார தந்தை ஏழைத் தந்தை” என்ற இந்த புத்தகத்தின் மூலம் நமக்கும் பயிற்றுவிக்கிறார் ஆசிரியர் ராபர்ட் கியோஸாகி.
பணக்காரர்களும், ஏழைகளும் உழைப்பில் வேறுபடுவது இல்லை. ஆனால், எதற்காக உழைக்கிறோம் என்று சிந்திப்பதில் வேறுபடுகிறார்கள். “பணத்துக்காக வேலை செய்பவன் ஏழை, பணத்தை தனக்காக வேலை செய்ய வைப்பவன் பணக்காரன்”. இந்த வித்தியாசம்தான் பணக்காரனை மேலும் பணக்காரன் ஆக்குகிறது.. ஏழையை மேலும் ஏழை ஆக்குகிறது.
“என்னப்பா சொல்லுற, உலகமே பணத்துக்காகத்தானே ஓடுது, பணத்துக்காக வேலை செய்யாம, சும்மா ஓசில வேலை செய்ய சொல்லுறியா”னு கேள்வி வரலாம். இங்கே ஆசிரியர் சொல்ல வருவது “வேலை செய்து பணம் சேர்ப்பது என்பது, நீண்டகால பிரச்சனைக்கு தற்காலிக தீர்வுதான். நிரந்தர தீர்வு என்பது பணத்தை உருவாக்குவதுதான்”.
பணத்தை உருவாக்குவது என்றவுடனே, பணத்தை அச்சடிக்க சொல்லுகிறார் என்று எண்ண வேண்டாம். பணத்தை உருவாக்குவது என்பது, பணத்தை சம்பாதித்து தரும் சொத்துக்களை உருவாக்குவது. அதற்கு முதலில் சொத்துக்களுக்கும், கடன்களுக்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏழைகள் சொத்துக்கள் என்று நினைத்து கடன்களை கைவசப்படுத்திக்கிறார்கள்.. அதனால் பணத்தை இழக்கிறார்கள். பணக்காரர்களோ சொத்துக்களை கைவசப்படுத்தி, அதன்மூலம் பணத்தை உருவாக்குகிறார்கள். எளிதாக சொல்லுவது என்றால், சொத்து உங்கள் பாக்கெட்டில் பணத்தைப் போடுகிறது, கடன் உங்கள் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கிறது.
நம் சிறுவயதில் இருந்து பணத்தைப் பற்றியும், பணக்காரர்கள் பற்றியும் தவறான பல கருத்துக்களை நமக்குள் இந்த சமூகம் திணித்து.. நம்மை அவற்றிலிருந்து தள்ளியே வைத்து உள்ளது. பள்ளிகளும்கூட வேலைசெய்து பணம் சம்பாரிப்பது எப்படி, என்ற அளவில் மட்டும் நமக்கு கற்றுக்கொடுகிறது. பணத்தை உருவாக்குவது பற்றியோ, பணத்தை கையாளும் பொருளாதார அறிவைப் பற்றியோ பள்ளிகள் ஒருபோதும் நமக்கு கற்றுத் தருவதில்லை, அவற்றையெல்லாம் வரைபடங்களுடன் நமக்கு கற்றுத்தருக்கிறார் ராபர்ட் கியோஸாகி(ஆசிரியர்).
ஆசிரியர் பணத்தை உருவாக்குவது பற்றிய சில யோசனைகளை இந்த புத்தகத்தில் கூறியுள்ளார். அவை, பெரும்பாலும் அமெரிக்காவுக்கு மட்டும் பொருந்துவது போல உள்ளது. அதை மட்டும் இந்தியாவுக்கு, முக்கியமாக தமிழ்நாட்டிற்கு ஏற்றார்போல், கொஞ்சம் பட்டிடிக்கரிங் பார்த்து செயல்படுத்த வேண்டியுள்ளது.
பணத்தைப் பற்றி நாம் கொண்டுள்ள தவறான எண்ணங்களையும், பணக்காரர்கள் மேலுள்ள அபிப்ராயங்களையும் உடைத்து சுக்கு நூறாக்கி, பணத்தை உருவாக்கி நாமும் பணக்காரர்கள் ஆவதற்கான வழிகளை காட்டுகிறது இந்த புத்தகம்.
வாழ்வில் முன்னேற நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த புத்தகம் ஒரு வரப்பிரசாதம். திருமணத்துக்கு பரிசாக கொடுக்க தகுதியான புத்தகம்..!!
✍️ கோடி