1 review for சுபிட்ச முருகன்
Add a review
You must be logged in to post a review.
Original price was: ₹150.00.₹140.00Current price is: ₹140.00.
இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை.அன்றாடம் நம்மைச் சூழ்ந்து எப்போதுமுள்ளது.ஏதோ ஒருவகையில் அன்றாடத்தின் மீதான சலிப்பிலிருந்தே புனைவு என்னும் செயல்பாடு தொடங்கியிருக்கிறது.அன்றாடத்தைச் சொல்லும்போது கூட அன்றாடமல்லாததாக அதை ஆக்குவதே புனைவின் கலை.இது வாழ்க்கையின் முடுச்சுகளைப் பேசும் படைப்பு மட்டுமல்ல,அப்பால் சென்று ஒட்டுமொத்த வினாவில் தலையை ஓங்கி அறைந்துகொள்வதும்கூட எப்போதும் நான புனைவில் எதிர்பார்க்கும் கூறு இது.
“எப்படிப் பொத்தி வச்சாலும் அவ வந்து கொத்திருவா” என்ற வரியிலிருந்து இந்நாவலை நான் மறுதொகுப்பு செய்யத்தொடங்கினேன்.ஒரு தொடுகை கருவிலிருக்கும் குழந்தையை வந்து தொடும் புறவுலகு போல.அது ஓர் அழைப்பு.ஏவாளை லூசிஃபர் என.தந்தேயை ஃபியாட்ரிஸ் என.இருண்டபாதைகளினூடாக அழைத்துச் செல்கிறது.விழுந்து எழுந்து புண்பட்டு சீழ்கொண்டு கண்ணீரும் கதறலுமாக ஒரு நீண்ட பயணம். ‘வட்டத்தின் ஓரமாகத் தவழ்வதைத் தவிர வேறு எதுவும் அப்போது எனக்கு விதிக்கப்படவில்லை” என்னும் பெருந்தவிப்பு.
-ஜெயமோகன்
Delivery: Items will be delivered within 2-7 days
Kathir Rath –
சுபிட்ச முருகன்
Saravanan Chandran
எழுத்தாளரோட ரோலக்ஸ் வாட்ச் மட்டும்தான் வாசிச்சுருக்கேன். ஆனா அவரோட எழுத்துக்களை தொடர்ந்து வாசிச்சுட்டு தான் இருக்கேன், இணையத்துலயும் பத்திரிக்கைகள்லயும். அவரோட பெயர் போட்டுருக்க புத்தகத்தை புரட்டி பார்க்காம வாங்கற அளவு பிடிச்ச எழுத்தாளர்.
அமேசான்ல மின்னூலா ஆஃபர்ல வாங்குனது. நேற்றிரவு தனிமைல மின்வெட்டுல இருட்டுல உக்காந்து கிண்டில்ல வாசிக்க ஆரம்பிச்சேன். 10% தாண்டறதுக்குள்ளயே ஒரு மாதிரி ஆகிருச்சு. ஏதேதோ பழைய ஞாபகங்கள் வந்து போச்சு.
எல்லாரும் எந்த படத்தை பார்த்து பயந்துருக்கிங்கன்னு கேக்கறப்ப ஒவ்வொருத்தரும் பிரபலமான படங்களை சொல்லுவாங்க, நான் ஈரம் படத்தை சொல்லுவேன். அந்த படத்துல அப்படி எதுவும் பயமுறுத்தற காட்சி இல்லையேன்னு கேப்பாங்க. அதாவது அந்த படத்துல அந்த பொண்ணை பத்தி தப்பா பேசுனவங்க எல்லாரும் கொல்லப்படுவாங்க இல்லையா, நான் ஒரு காலத்துல விளையாட்டுக்குங்கற பேர்ல விவரம் தெரியாம அப்படி நிறைய பேசிருக்கன், இன்னொன்னு நான் இந்த படம் பார்த்தது பொள்ளாச்சி ஆழியார் டேம் பக்கத்துல இருக்க ஒரு தென்னந்தோப்புக்கு நடுவுல இருந்த மோட்டார் ரூம்ல, ஒரு டவர் கட்டற வேலையா போயிருந்தப்ப போனது. சுத்தி 40 ஏக்கர் தென்னந்தோப்புதான். வெளிச்சம்னு 2 கிமீ தாண்டி ஒரு தெருவிளக்கு தெரியும். அப்புறம் நான் இருந்த மோட்டார் ரூம் பக்கத்துல நீச்சல் குளம் மாதிரி அகலமா, ஆனா ஆழமா ஒரு கிணறு, 10 அடிலயே தண்ணி தெரியும். கூட இருந்தவன் போன் பேசிக்கிட்டே எங்கேயோ போயிட்டான். அவன் திரும்ப வர வரை என்னை பயமுறுத்தனது அந்த படமோ, பேயோ இல்லை, என்னோட ஞாபகங்கள், நான் செஞ்ச வினையோட எதிர்வினை என்னவா இருக்குங்குற குழப்பம்.
சாதாரண ஞாபகமே ஒருத்தனை இவ்வளவு பயமுறுத்தும்னா, ஒரு குடும்பத்தையே சாய்க்கற பொண்ணோட சாபம் அந்த குடும்பத்தோட கடைசி வாரிசை என்ன பாடுபடுத்தும்?
இது பேய் கதைல்லாம் இல்லை, இது வேற, உளவியல் சம்பந்தமானதுன்னு சொல்லலாம். அப்படியே அங்கே இருந்து ஞான மரபியலை நோக்கி போகுது.
கூடாஒழுக்கம்னு ஒரு அதிகாரம் திருக்குறள்ல இருக்கும். அதுல இருக்க குறள்களை விட அந்த வார்த்தையே எதையெதையோ ஞாபகபடுத்தும். இந்த புத்தகத்துலயும் வர அந்த மஞ்சள் முக அத்தை ஏற்படுத்துன தாக்கம் இருக்கே….யப்பா. எதையெதையோ ஞாபகபடுத்திருச்சு.
பெண்கள் மீதான ஆண்களோட மோசமான வன்முறை என்னவா இருக்கும்? அதுலயும் ஒன்னுமே பண்ண முடியாதுங்கறப்ப செய்யற கடைசி தாக்குதல்….! அவ ஒழுக்கத்தை பத்தி கேள்விய எழுப்பறது? தப்பாலாம் சொல்ல வேண்டாம், கேள்வி எழுப்புனா போதும். இவ்வளவு அழகா இருக்கவளை எவனும் முடிக்காமலா இருப்பான்? இந்த கேள்வி என்ன வித விளைவுகளை ஏற்படுத்தும்னு சொல்றப்ப யாரும் யோசிக்கறதில்லை. அதுலயும் இப்ப ஐடில வேலை பாக்கற பொண்ணுங்களை பத்தி இந்த மாதிரி கேள்விதான் முதல்ல வைக்கபடுது.
சரி நம்ம கதைக்கு வருவோம். ஒரு குடும்பத்தலைவரோட வஞ்சக சதினால உயிரிழக்கற ஒரு பெண்ணோட சாபம் அந்த குடும்பத்துல இருக்க எல்லாரையும் காவு வாங்குது. கடைசி தலைமுறை பையனையும் அது நெருங்குது. எந்த வடிவத்துலன்னா அதே இயலாமைல ஒழுக்கத்தை கேள்வி எழுப்பற நிலைக்கு தள்ளுற வடிவம்…
அங்கே இருந்து ஒரு சாமியாரை நோக்கி நகர்த்தபடும் அந்த வாரிசோட ஞான அனுபவங்கள்தான் மிச்ச கதை.
எல்லாத்தையும் சொல்லிட்டா சுவாரசியும் போயிரும்.
ஆனா சாருகிட்ட இருந்து ஒரே ஜம்ப்ல ஜெமோகிட்ட தாவிருக்க வேண்டாம். நிஜமா இதுக்கு ஆசான் முன்னுரை எழுதுன விசயம் புத்தகத்தை வாங்குன பிறகுதான் தெரியும்.
ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு குறிப்பிட்ட உணர்வை எழுதறது ரொம்ப சிறப்பாக வரும். எழுத்தாளர் சரவணன் சந்திரனுக்கு மனிதர்களோட குற்ற உணர்ச்சிய சொல்றது அவ்வளவு நல்லா வருது. அதுலயும் மீனாட்சி கோவில்ல இருந்து கூட்டி போற மனிதரோட கடந்த காலம்லாம் என்னவோ பண்ணிருது.
அப்புறம் அந்த சந்தன வியாபாரியோடது. எதையும் விவரமா சொல்லலை, சொல்ல தேவையில்லை. தாண்டவராயன் கதைல வெங்கடேசன் சொல்ற மாதிரி சொல்றது கதை இல்லை, சொல்லாம விடப்படறதுதான் கதை, அதுல இருக்கு சூட்சம்ம்.
இதைல்லாம் இன்னும் கொஞ்சம் பெருசா எழுதுனிங்கன்னா எல்லாத்தையும் விட்டுட்டு சாமியாரா போயிடலாம்னு கூட தோணும். குறைச்சுக்கோங்க எழுத்தாளரே….
எனக்கு புத்தகம் பிடிச்சுருந்த்து, ஆனா இது இதுக்கு முந்தைய எழுத்தாளரோட படைப்புகள் மாதிரி இருக்காது.