THALA SIXERS STORY
1983ம் ஆண்டு முதன்முதலாக, கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக் கோப்பையை கையில் ஏந்தி கிரிக்கெட் உலகில் மகத்தான சாதனையைப் படைத்தது. அந்த நிகழ்வுகளை மையமாக்கி எடுக்கப்பட்டிருக்கும் ‘83’ திரைப்படம் வெளியாகி, உலகமெங்கும் வசூல் சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கும் சமயத்தில் ‘தல – sixer’s story’ நூலுக்கான முன்னுரையை எழுதுவது நெகிழ்ச்சியான அனுபவத்தைத் தருகிறது.
உலக நாடுகள் மொத்தமாக கொரோனா ஊரடங்கில் முடங்கி, எதிர்காலம் குறித்த அச்சத்தில் உழன்றுகொண்டிருந்த சமயம். மக்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்தக்கூடிய தொடர் ஒன்றை ‘குங்குமம்’ இதழில் தொடங்கத் திட்டமிட்டார் ‘தினகரன்’ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர். அவர்கள். அவர் தேர்ந்தெடுத்த நம்பிக்கை நாயகன்தான் மகேந்திரசிங் தோனி.

பிரபல கொலை வழக்குகள் 


Reviews
There are no reviews yet.