YOGA SASTHIRAM ENNUM SRIMATH BAGAVATGEETHAI
ஹிருதயம் சுத்தமானால், தெளிந்த புத்தி தோன்றும், பகவான் சொல்லுகிறான்: ‘அந்த அறிவுத் தெளிவிலே நிலை பெற்று நில், அர்ஜுனா’ என. அப்போது நீ செய்யும் செய்கை யாதாயினும், அது நற்செய்கையாம். நீ ஒன்றும் செய்யாதே, மனம் போனபடியிருப்பின் அஃதும் நன்றாம். நீ நற்செய்கை, தீச் செய்கை என்ற பேதத்தை மறந்து, உனக்கு இஷ்டப்படி எது வேண்டுமாயினும் செய்யலாம். ஏனென்றால், நீ செய்வதெல்லாம் நன்றாகவே முடியும். உனக்கு புத்தி தெளிந்து விட்டதன்றோ? புத்தி தெளிவற்ற இடத்தே உனக்குத் தீயன செய்தல் ஸாத்தியப்படாது. ஆதலால், நீ நல்லது தீயது கருதாமல் மனம் போனபடியெல்லாம் வேலை செய்யலாம்.
Reviews
There are no reviews yet.