Gnayitrukizhamai Athikalai Sathukkam
நமதென்று எண்ணி நாம் வாழ்ந்திருக்கும் இந்த வாழ்வானது உண்மையில் நமதில்லையோ எனும் கலக்கத்தை தூண்டும் கவிதைகள் யமுனா ராஜேந்திரனுடையவை.அடைக்கலம்புக நிலந்தேடி கடல்களெங்கும் அலைந்து திரியும் படகு மனிதர்களின் விழிகளுக்கு நிகரான தலைப்பினை கொண்டவை இவருடைய வார்த்தைகள்.அதிகாரங்களால் கொலைபடும்,விதைக்கப்படும்,கைவிடப்படும் சக மனிதர்களைக் குறித்து ஏதொன்றும் செய்யவியலாத ஒருவனின் காய்த்த மனநிலையே இந்த கவிதைகளின் நதிமூலம்.நமது அத்தர் கற்பிதங்களை அப்பால் யதார்த்தமானது கண்ணீரும் குருதியும் மலமும் மூத்திரமும் சளியும் கொண்டதென முகத்திலறைந்து சொல்பவை இவை.துயரத்தின் இருளும் பசப்புகளின்பாலான பழிப்பும்,அபத்தம் அளிக்கும் மனா வாசமும் நிறைந்த இந்தக் கவிதைகளிலிருந்து தப்பித்து வெளியேறுவது கடினம்.

இராமாயண ரகசியம்
பாரதியும் ஜப்பானும்
மூளைக்கு வேலை தந்திரக் கணக்குகள் 100
பார்த்திபன் கனவு
ஜெயகாந்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நரக மயமாக்கல்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
மரப்பசு 
Reviews
There are no reviews yet.