1 review for அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள்
Add a review
You must be logged in to post a review.
₹75.00
1. குலதெய்வ – நாட்டார் தெய்வ எதிர்ப்பிதழ்
2.குலதெய்வங்கள் அழியாமல் அகமணமுறை அழியாது!
3.பார்ப்பனர் மற்றும் பார்ப்பனியக் கட்டுப்பாட்டில் இயங்கும் நாட்டார் தெய்வங்கள்
4.முதலில் அழிக்கப்பட வேண்டியவை சிறுதெய்வங்களும், நாட்டார் தெய்வங்களுமே!
5.புராணங்களை அடிப்படையாகக் கொண்டவையே குலதெய்வங்கள்!
6.இந்து மதத்தையும் ஜாதியையும் காக்கும் நாட்டார் தெய்வங்கள்
7.புத்த மதத்தின் அழிவுக்குக் காரணம் குலதெய்வ வழிபாடுகளே!
8.மாரியம்மன் பண்டிகைக் காட்டுமிராண்டித்தனம்!
9.சக்கிலியர்களின் குலதெய்வங்கள்
10.கொங்கு வேளாளர் குலதெய்வங்கள்
11.பறையர்களின் குலதெய்வங்கள்
12.வன்னியர்களின் குலதெய்வங்கள்
13.பள்ளர்களின் குலதெய்வங்கள்
14.கள்ளர்களின் குலதெய்வங்கள்
Delivery: Items will be delivered within 2-7 days
Art Nagarajan –
அடிமைப் படுத்தும் குலதெய்வங்கள்.
காட்டாறு பதிப்பகம்.
தமிழர்
தொன்மங்களை
மீட்போம்,
தமிழர்
பாரம்பரியங்களை
காப்போம் என்றும்,
தமிழ்த்தேசிய
அமைப்புகளைச்
சேர்ந்த பலரும்,
பலகாலமாக
பேசிவருவதை பார்த்திருக்கிறோம். அண்மைக்காலமாக
அந்தக் குரல்கள்
அதிகமாகி வருகிறது.
இவர்கள்
காப்பாற்ற முயற்சிப்பது
தமிழர் பண்பாடுகளை அல்ல,
முழுக்க, முழுக்க,
ஆரியப் பார்ப்பன பண்பாடுகளையே
என்பதை
இந்த நூல் பல்வேறு
கள ஆதாரங்களை
ஆய்வு செய்திருக்கிறது.
வேதங்களுக்கும்,
பார்ப்பனர்களுக்கும்,
எதிராக
புத்தருக்கு முன்பே
கபிலர், கணாதர்,
போன்ற பரிவிராஜாக்கள் (நாடோடிகள்) பலரும்
உருவாக்கிய பார்ப்பன
எதிர்ப்புத் தத்துவங்களை
வரலாற்றில் இன்றும்
நாம் காண முடிகிறது.
புத்தர் உட்பட
அனைவரிடமும்
சின்னச் சின்ன சறுக்கல்கள் இருந்தது.
அவைகளை பயன்படுத்தி
பார்ப்பனியம்
அந்த தத்துவங்களை
எப்படி விழுங்கியது
என்பதை விளக்குகிறது
இந்த நூல்.
12ம் நூற்றாண்டிலும்,
அதற்குப் பின்பும்,
சுல்தான்கள், முகலாயர்கள் ஆட்சியிலும்,
பார்ப்பனப் பண்பாட்டு
எதிர்ப்பு புரட்சி கிளம்பியது,
கபீர், இரவிதாஸர்,
குருநானக், வள்ளலார், இராமானுஜர்,
எனப் பலரும்
இந்து வேத சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு
எதிராகவே
பணிகளைச் செய்தனர்.
தமிழகத்தின்
பல்வேறு பகுதிகளில்
ஆய்வறிஞர்கள்
பதினெட்டு பேர் சேர்ந்து
கள ஆய்வு செய்து,
பல்வேறு சாதிகளின் குலதெய்வஙகள் பற்றி
அந்தந்த
குலதெய்வங்களின் பூசாரிகளிடமும்,
வழிபடும் மக்களிடமும்,
நேரடியாக
தகவல்களைப் பெற்று, அனுபவங்களை கேட்டறிந்து அதை அப்படியே
அச்சில் ஏற்றி நூலாக்கியிருக்கிறார்கள்.
மிகுந்த அக்கறையோடும்,
மிக கவனத்தோடும் தயாரிக்கப்பட்டுள்ளது
இந்த நூல்.
ஒரு மனிதன்
பிறக்கும்போது
சாதி, மத,
உணர்வுகளின்றித்தான்
பிறக்கிறான், வளர்கிறான்.
வளரும்போது
அவனுக்கு
சாதி முறையையும், ஆணாதிக்கத்தையும்,
ஊட்டி வளர்ப்பதும், பயிற்றுவிப்பதும்,
தன்னை சாதி ரீதியாக
உயர்ந்தவன் என்றும்
ஒரு சாதியினர்
கருதிக் கொள்வதற்கு
எது காரணமாகிறது
என்பதைப் பற்றி
மிக விரிவாக
ஆராய்ந்திருக்கிறது
இந்த நூல்.
ஒடுக்கப்பட்ட மக்கள்
தங்களை
அடிமைகளாக,
சேவகம் செய்பவர்களாக,
கருதிக் கொள்வதற்கு
எது காரணமாக இருக்கிறது என்பதையும் நுண்மையோடு ஆராய்ந்திருக்கிறது.
தீண்டாமைக்கு
முக்கிய காரணமான, மனநிலையையும், சிந்தனையையும்
விதைப்பவைகளாக,
குலதெய்வ
வழிபாட்டு முறைகளில் நிரவிக்கிடப்பதை
ஆய்வாளர் குழு ஆய்ந்தறிந்திருக்கிறார்கள்.
பேராசிரியர்.
தொ.பரமசிவன் அவர்கள் மக்களின் பண்பாட்டு அசைவுகளை நேரடியாகவே நன்கறிந்தவர்.
பண்பாட்டுத்தளத்தில்
அவரது கருத்துக்களோடு மாறுபாடுகள் உள்ளதை ஆய்வுக்குழு தெரிவிக்கிறது.
நாட்டார்
தெய்வங்கள் குறித்து
தொ. பாவின்
நேர்காணல்களில்
இருக்கும்
சிலதகவல்களுக்கு
மறுப்பு தெரிவித்ததோடு, அவற்றிற்கு
பதில்களையும்
கொடுத்துள்ளது
ஆய்வுக்குழு.
சாதியை,
சாதி முறையை,
நியாயப் படுத்தி,
அதை பலப்படுத்தாத தெய்வங்களே இல்லை என்பதையும்,
ஆணாதிக்கத்தையும், பெண்ணடிமைத்
தனத்தையும்
வலியுறுத்தவே
இந்த தெய்வங்கள் பயன்படுகின்றன
என்பதையும்
ஆய்வுக்குழு நிறுவுகிறது.
மனு சாஸ்திரத்திலும், வேதங்களிலும்,
கூறப்பட்டுள்ள
சாதி முறையை
பயிற்றுவிக்கும்
களங்களாகவே
இந்த வழிபாடுகள் உள்ளது என்கின்றனர்.
கோடிக்கணக்கான
தாழ்த்தப்பட்ட மக்கள்
அனைவரும்
ஏதாவது ஒரு குலதெய்வத்தை வணங்கிக்கொண்டுதான் வருகிறார்கள்.
பல நூற்றாண்டுகளாக குலதெய்வங்களை
வணங்கி வந்த
மக்களின் வாழ்க்கை நிலை
பொருளாதாரம், கல்வி,
மற்றும்
சமூக வாழ்வியல்களில்
இன்றுவரை
மாற்றம் பெறாமல்
இருப்பதற்கான
காரணங்கள் என்ன
என்ற கேள்விகளை
இந்த நூல்
எழுப்புகிறது.
சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களாகவே வாழ்வதும்,
வன்கொடுமைகளில்
அழிவதும்,
மலக்குழிகளில்
சாவதுமாகவே
இன்றுவரை உள்ளது.
எந்த சாதியாக
இருந்தாலும்,
எந்த இனமாக
இருந்தாலும்
ஒரு சாதிக்குள் திருமணம்
என்று முடிவு செய்துவிட்டால், அதில் மாமன், மச்சான்,
பங்காளி என்ற
உறவு முறைகளை அடையாளப்படுத்த
அடிப்படையாக இருப்பது குலதெய்வங்கள் தான்.
இதுவும் வேதகால நடைமுறைதான்
வர்ணாசிரமத்தை
சாதியாய்,
சாதிப் படிநிலையை
தவறாமல் பின்பற்றியே வருகின்றன!
கல்வியை
கடவுளாக மதித்து
அரசு கோடிக்கணக்காய்
பணம் செலவழித்தும்
ஆண்களில்
100க்கு பத்து பேர்களும்,
பெண்களில் 1000க்கு
பத்து பேர்களும் கூட படிக்கவில்லை என்றால்
உண்மையிலேயே
கல்வி என்பதாக
ஒரு கடவுள் இருந்து
நமது பூஜையை
ஏற்றுக் கொள்கிறது
என்று நம்புகிறீர்களா
என்ற கேள்வியை
24.03.1929ல்
தந்தை பெரியார்
குடியரசு ஏட்டில் எழுதியது எவ்வளவு பொருத்தமானது
என்று இந்தநூல்
நினைவு படுத்துகிறது!!
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
ART.நாகராஜன்.
புத்தக வாசல், மதுரை.
24.06.2020.