ஓநாய் குலச்சின்னம்

Publisher:
Author:
(2 customer reviews)

500.00

ஓநாய் குலச்சின்னம்

500.00

மங்கோலிய மேய்ச்சல்நில நாடோடி மக்களின் மகத்தான நாகரீகம் நவீனத்துவத்தின் வன்முறை தாக்குதல்களால் மறைந்துபோன அவலம் பற்றிய நாவல் ‘ஓநாய் குலச்சின்னம்’. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உயிர் கொண்டிருந்த மேய்ச்சல் நிலம் என்ற பெரிய உயிர் சில ஆண்டுகளுக்குள்ளாகப் படுகொலை செய்யப்பட்ட வரலாற்று நிகழ்வின் புனைவு.

ஓநாய் குலச்சின்னமானது மேய்ச்சல் நிலத்தின் ஆன்மா. மங்கோலிய மேய்ச்சல் சில நாடோடி மக்களின் ஞான குருவாகவும், போர் கடவுளாகவும், மேய்ச்சல் நில காவலனாகவும், குலச் சின்னமாகவும் விளங்கிய ஓநாய்கள் ‘புரட்சிகர நடவடிக்கை’கள் மூலம் அழித்தொழிக்கப்பட்டு மேய்ச்சல்நில ஆன்மா சிதைவுற்ற கதை.

மேய்ச்சல்நில ஓநாய்களின் வசியத்திற்கு ஆட்பட்டு ஓநாய்கள் குறித்து நேரடி அனுபவமும் ஞானமும் பெறுவதற்காக ஒரு ஓநாய்க்குட்டியை எடுத்து வளர்த்த ஒரு சீன இளைஞனின் பார்வையில் உருவாகியிருக்கும் படைப்பு.

2004ஆம் ஆண்டு வெளியான இந்தச் சீன நாவல் அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக சீனாவில் நாற்பது லட்சம் பிரதிகள் விற்பனையானது.

Delivery: Items will be delivered within 2-7 days