1 review for கடவுளின் நாக்கு
Add a review
You must be logged in to post a review.
₹475.00
தி இந்து நாளிதழில் தொடராக வெளிவந்து பெரும்பாராட்டினைப் பெற்ற இக்கட்டுரைகள் உலகெங்குமுள்ள கதைகளையும் அக்கதைகள் வழியாகப் பேசப்படும் வாழ்க்கை அனுபவங்களையும் எடுத்துக்கூறுகிறது.
Delivery: Items will be delivered within 2-7 days
bhojan –
கடவுளின் நாக்கு – கதைகளின் வழி நம்மை அழைத்து செல்லுதல்
இந்த புத்தகத்தில் மொத்தம் 77 தலைப்புகளில் கட்டுரை இருக்கிறது உண்மையில் கதைகள் தாயகம் எது? கதைகள் எப்படி உருவாகியது? யார் கதைகளை உருவாகினார்கள் ? உலகத்தின் முதல் கதை சொல்லி யார் ? இதை பற்றி நாம் எப்போதாவது யோசித்து பார்த்து இருக்கிறோமா அப்படி யோசித்து பார்த்தால் அதற்க்கு ஆயிரம் கணக்கான கதைகள் உருவாகிவிடும் காரணம் ஒரு ஒரு கதையும் மனிதனின் கற்பனையால் உதிர்த்தவை அது எங்கும் இருக்கும் எங்கு பயணம் செய்யும் உதாரணம் பாட்டி வடை சுட்ட கதை அது உண்மையில் இந்தியாவில் உருவான கதை அல்ல அது ஒரு கிரேக்க கதை அங்கு வடைக்கு பதில் வேறு ஒரு வேறு ஒரு பலகாரம் அவோலோ தான் ஆனால் அது இந்தியா வரை பயணம் செய்து இருக்குறது சிறு வயதில் ஈசாப் , பஞ்சதந்திர , அரேபிய இரவுகள் , முல்லா கதைகள் என்று கேட்டு மகிழ்ந்து இருப்போம்.இப்போதும் கூட கதை கேட்பது ஒரு அருமையையான விஷயம் தான்.இந்த புத்தகத்தில் ஒரு ஒரு நாட்டில் உள்ள நாடோடி கதைகள் பற்றியும் அது போல இந்தியாவில் உள்ள மாநில கதைகள் சிலவற்றையும் சொல்லி இருக்கிறார் எனக்கு இந்த கட்டுரை தொகுப்பில் மிகவும் பிடித்த முக்கியமான கதை எனப்து குரங்கு உண்ணாவிரதம் இருந்த கதை , வயதான பூனை கதை , பலஸ்தீனன துறவி கதை , கொசு திருமண கதை , மனிதன் நல்லவனா என்ற கதை இதை தவிர மற்ற கதைகளும் நன்றாக இருக்கிறது அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது