அம்பேத்கர்: இந்துவயப்படுத்த முடியாத தத்துவம்

Publisher:
Author:

130.00

Out of stock

‘ஆசை வெட்கமறியாது’ என்று வார்த்தைகளிலிருந்து இந்நூல் குறித்து நமது கண்டனத்தை தொடங்கலாம். ஒரு நூலுக்கு மறுப்புரை எழுதுவது என்பது தேவையின் அடிப்படையில் இயல்பானதுதான். ஒன்றும் புதிதல்ல. ஆனால், இந்த நூலுக்கு மறுப்புரை மட்டும் போதாது. கண்டனமும் தெரிவிக்கவேண்டும். ஒருபுறம் இந்துத்துவத்திற்கு பேராசை; மறுபுறம் வழக்கம் போல் மோதி அழிப்பது; இயலாவிட்டால் உள்வாங்கித் ‘தின்று செரிப்பது’ என்பதை அது கொள்கையாக வைத்திருக்கிறது. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் என்ற உலகப் பேராசைனையும் தன்னுள் செரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் சதி செய்கின்றனர். புத்தரை விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக்கிய அதே வரலாற்றுச் சூழ்ச்சியின் மூலம் இன்று டாக்டர் அம்பேத்கரையும் அது இரையாக்கத் துடிக்கிறது. அதே வெட்கம் விலகிய பேராவலில் விளைவுதான் இந்துத்துவத்தின் இம்முயற்சி. இத்தகைய சூழ்ச்சி அவர் வாழ்ந்த காலத்திலேயே தொடங்கப்பட்டதுதான். தமிழுக்குச் சற்று புதிது; இந்துத்துவத்திற்கு அல்ல.

Delivery: Items will be delivered within 2-7 days