Attar
“துரத்திக்கொண்டு ஓடவேண்டாம். அந்தக் கல் மேல் கண் மூடிக்கொண்டு உட்கார். அது உன்னிடம் வரும்” ‘தமன் நெஹாரா’ கதையில் வரும் மேற்கண்ட ஜென் கதையைப் போலவே நிதானத்தில் தாமாக வருபவை நல்லதம்பியின் கதைகள். ‘Yes’ என்று சொன்னது மனமா, தேகமா, அறிவா?” இவை மூன்றுமே இந்தக் கதைகளைச் சொல்லுகின்றன. ஆத்ம வஞ்சனை போன்ற வித்தியாசமான சொல்லாடல்கள். நான் காட்டின் அணைப்பில் தொலைந்துபோனேன். படுக்கையில் நாமும் காதலின். காமத்தின், துணையின், வலிகளின், பாசத்தின் அணைப்புக்களில் தொலைந்து போகிறோம். முகம் பார்க்கும் ‘கண்ணாடி’ பேசுவதும், மைசூரின் காவேரி நதியும் ஒலிம்பியா டாக்கீசும் மைசூரின் லலிதமகால் பேலஸ் ஓட்டலும் கதை சொல்வதும் சுவாரசியம். ‘அத்தர்’இன் மணத்தைப் போல, பிச்சயமில்லாதவர்களின், பிரிந்த காதலர்களின், விலாசமற்ற உறவுகளின், பழுத்த தம்பதியரின் அன்பானது பெரும்பாலான கதைகளில் விரவியிருக்கிறது. ஆறு கதைகளுமே மூன்று மொழிகளில் பிரசுரமாகி இருப்பதில் வியப்பில்லை.

மு.க - வெறும் வாழ்க்கை வரலாறல்ல, ஒரு Scan report 
Reviews
There are no reviews yet.