அவதூதர்

Publisher:
Author:

Original price was: ₹180.00.Current price is: ₹170.00.

அவதூதர்

Original price was: ₹180.00.Current price is: ₹170.00.

AVATHOODHAR

இலக்கிய வட்டம் பத்திரிகை நடந்துகொண்டிருந்த சமயம் அதில் அநுபந்தமாக வெளியிட நடுத்தெரு என்று ஒரு நாவல் தமிழில் எழுதினேன். அதை முடித்தபிறகு அதில் சில பகுதிகள்தான் வெளியாயின. அதையே வேறு கோணத்தில் நின்று ஆங்கிலத்தில் எழுதிப் பார்க்கலாமே என்று தோன்றியது. அவதூதர் என்று பெயர் வைத்து சற்று விரிவான கண்ணோட்டத்துடன் ஒரு மாதத்தில் எழுதி முடித்துவிட்டேன்.

அந்த நாவலை டைப் செய்து அப்பொழுது விளம்பரப் படுத்தப்பட்டிருந்த ஒரு சர்வதேச நாவல் போட்டிக்கு அனுப்பினேன். நாவலுக்குப் பரிசு வரவில்லை. ஆனால் பிரசுரிக்க ஏற்றுக்கொண்டிருப்பதாகச் சொல்லி ஒரு ஆயிரம் டாலர் ராயல்டி முன் பணமும் ஒரு காண்டிராக்டும் அமெரிக்கப் பிரசுராலயத்திலிருந்து வந்தது. அச்சுக்கு நூலைக் கொடுக்கும்போது அதில் சில மாறுதல்கள் செய்ய வேண்டும் என்று எழுதினார்கள். முக்கியமாக, அவதூதர் சித்து விளையாடுவதாய் வருகிற இடங்களை மாற்ற வேண்டும், பகுத்தறிவுக்கு இந்த அதிசயங்கள் ஒத்து வரவில்லை என்றார்கள். நான் மறுத்துவிட்டேன். இந்த நம்பிக்கைகள், அதிசயங்கள் இந்த சமுதாயத்தில் ஒரு பகுதியினரிடம் உள்ளவை என்று சொல்லி.

அவதூதர் என்கிற ஆங்கில நூலை நான் வேறு யாரிடமும் பிரசுரிக்க முயலவில்லை.
சென்னைக்கு 1985இல் திரும்பியபிறகு குமாரி லதா ராமகிருஷ்ணனிடம் என் டைப் பிரதியைத் தந்து தமிழில் மொழிபெயர்த்துத் தரச் சொன்னேன். நான் அதில் கை வைக்கவில்லை. அவர் மொழிபெயர்த்தபடி அந்த நாவலைப் பிரசுரித்திருக்கிறேன்.
நாவல் உங்கள் கையில் இருக்கிறது.

க.நா. சுப்ரமண்யம்

Delivery: Items will be delivered within 2-7 days