கொலைக் களங்களின் வாக்குமூலம்:
♦நந்தன் ♦காத்தவராயன் ♦மதுரைவீரன் ♦முத்துப்பட்டன்
நந்தன், காத்தவராயன், மதுரைவீரன், முத்துப்பட்டன் ஆகிய நால்வருக்குமே புறச்சான்றுகள் இருப்பது பூரிக்க வேண்டிய விஷயம். இவர்கள் வாழ்ந்த பூமிக்குச் சென்றது புதுவித அனுபவமாய் இருந்தது. அதுவும் நந்தன் நடமாடிய பகுதிகளுக்குச் சென்றது மெய்சிலிர்ப்பைத் தந்தது. முற்றிலும் எதிர்பாராத செய்திகள் கிடைத்தன இதர கள ஆய்வுகளிலும். வரலாற்று நினைவுகளை நெஞ்சில் சுமந்து, இறக்கி வைக்க இடம் தேடித் திரியும் மனிதர்களை சந்திக்க முடிந்தது.
இலக்கிய மறுவாசிப்பும் கள ஆய்வும் கலந்த ஒரு படைப்பு இது. அதனால் வரலாற்று இலக்கிய புலனாய்வு நூலாக அமைந்தது. இந்தப் புதுவகை முயற்சிக்கு வாசகர்கள் தரும் ஆதரவு இதரர்களையும் தமிழக வரலாற்று தடையங்களை நோக்கி விரைய வைக்கும் என நம்புகிறேன்.
– பேராசிரியர் அருணன்
ART Nagarajan –
கொலைக் களங்களின் வாக்குமூலம்
தோழர் அருணன்.
வசந்தம் வெளியீடு.
பஞ்சமி நிலங்களை மட்டுமல்ல,
பஞ்சமர் வரலாறுகளையும்
மீட்க வேண்டியுள்ளது.
தெய்வீக மூடியை
கழற்றிப் பார்த்தால்
கிளர்ச்சி முகம் தெரிகிறது!
நந்தனை எரித்த வர்ணாசிரம நெருப்பில் மிச்சமிருப்பவை இன்னமும் கனன்று கொண்டுதான் இருக்கிறது.
நந்தனை எரித்துவிட்டு இறுமாப்போடு திரிந்தவர்களை,
ஒன்றும் செய்யமுடியாமல், இவ்வளவு காலமும்,
கண்டும், கேட்டும்
ஆனந்த நடனமாடுகிறார் தில்லைநடராஜர்.
காத்தவராயனை ஆரியமாலை காதலித்ததற்கு கழுவில் ஏற்றியதும் வர்ணாசிரம நெருப்பில் தான்.
மன்னர் திருமலை ஆசைப்பட்ட
வெள்ளையம்மாள்,
மதுரைவீரன் மேல் காதல் கொண்டது,
அரன்மனை குற்றமாகிப்
போனது.
அதனால்
மதுரை வீரன்
மாறுகால், மாறுகை வாங்கப்பட்டதும்,
பொம்மியும்,
வெள்ளையம்மாளும் தீப்பாய்ந்ததும்
வர்ணாசிரம நெருப்பில் தான்.
முத்துப்பட்டன் பிராமணன்
இவன் அருந்ததியப் பெண்களான பொம்மக்கா, திம்மக்கா என்ற சகோதரிகளை
திருமணம் செய்து கொள்வதற்காக
பூணூலை அறுத்தெறிந்து திருமணம் செய்து கொண்டதால்
முத்துப்பட்டனையும்,
வெட்டிச் சாய்த்தது
வர்ணாசிரம நெருப்புதான்.
உழைக்கும் மக்களின்
வாழ்வியல் இலக்கியங்களை வாசிப்பதன் மூலம்தான் இலக்கியம் நெறிப்படுகிறது!
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
ART.நாகராஜன்
புத்தக வாசல், மதுரை.