1 review for என் கதை
Add a review
You must be logged in to post a review.
Original price was: ₹190.00.₹180.00Current price is: ₹180.00.
கமலாதாஸின் ‘என் கதை’யைத் தவிர்த்து, ஒரு பெண்ணின் அக வாழ்க்கையை அதன் சோகத் தனிமையுடனும் உண்மை அன்புக்கான அதன் தீராத வேட்கையுடனும் தன்னையே கடக்கும் அதன் விழைவுடனும் அதன் ஒழுங்கீனத்தின் நிறங்களுடனும் அதன் கொந்தளிக்கும் கவிதையுடனும் இந்த அளவு உண்மையுணர்வுடன் முழுமையாக வெளிப்படுத்திய ஒரு இந்திய சுயசரிதையை என்னால்
நினைத்துப் பார்க்கவே முடிவதில்லை.
சச்சிதானந்தன்
(மலையாளக் கவிஞர்)
Delivery: Items will be delivered within 2-7 days
Art Nagarajan –
என் கதை
கமலா தாஸ்
தமிழில். நிர்மால்யா
காலச்சுவடு
மிகைச் சொற்களில் விருப்பமில்லை, நம்பிக்கையுமில்லை.
எனினும்,
இந்த மதிப்புரைக்கான
வார்த்தைகளில்
உணர்ச்சி மேலிடுவதை
தடுக்க முடியவில்லை!
நிர்மால்யாவின்
மனம் திறந்த வார்த்தைகள்
இந்த நூலின் திறப்புகள்!
மாதவிகுட்டி என்ற
கமலா தாஸ்
மாத்ருபூமி நாளிதழின்
இயக்குனர் வி.எம்.நாயர், பாலாமணி அம்மாவின் மகளுமாவார்.
கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் இருந்தவாறே கமலதாஸ் “என்கதை”
எழுதுகிறார்.
உறவுமுறையின் பெயரால் பதினைந்து வயது
கமலாவை
அவரை விட
பலமடங்கு மூத்தவரான
மாதவதாஸுக்கு
திருமணம் செய்து
வைக்கிறார்கள்!
தனது முதலிரவை
‘தோல்வியுற்ற வன்புணர்ச்சி’ என்றே கமலாதாஸ்
எழுதுகிறார்.
பெண்ணின்
உடலையும், உணர்வையும்
நுகர் பண்டமாகவே
கருதும்
ஆண்களின் மன நிலைக்கு
எதிரான சாட்சியாகவே
கமலதாஸ் விளங்குகிறார்.
ஒவ்வொரு
உடலுறவு முடிந்த பின்பும்
என் கணவர்
அவரது
கைவளையத்துக்குள்
என்னை
பாதுகாக்க வேண்டுமென்றும்,
எனது முகத்தையே, வயிற்றையோ,
வருடுவார்
என்றும் விரும்பினேன்.
அவர் அப்படி செய்யாததால்
நான் அனுபவிக்க நேர்ந்த மிதமிஞ்சிய அசட்டையான
காம உணர்வு
மேலும் அதிகரித்தது.
ஒரு பெண்
தனது கணவரை
உதறிவிட்டு
வேறொரு ஆணின்
படுக்கைக்கு செல்லும்போது
அது முட்டாள்தனமாகவோ,
ஒழுங்கீனமாகவோ
ஆகிவிடாது.
ஒருபோதும்
என் கணவரின் முன்
எனக்கு காமவேட்கை எழுந்ததில்லை
அவரெதிரில்
எனது காம வேட்கை
ஒளிந்து கொள்கிறது.
இது பெண்ணின்
ஒப்புக்கொள்ளல் அல்ல,
மாறாக,
தன்னை சிறைவைத்திருக்கும் சமூகம், கலாச்சார, மதம், பண்பாடு,
ஆகியவைகள் காட்டும்
ஒழுக்க நெறிகளைப் பற்றிய சாட்சியமே.
பதின்ம பருவத்தில்
ஏற்பட்ட பல்வேறு
காதலைப் பற்றி பேசுகிறார்!
நாற்பதிற்கு பின்னால்
ஒரு மருத்துவரோடு
ஏற்பட்ட காதலைப் பற்றி பேசுகிறார்.
காலம் தவறிப்
பூக்கள் மலர்வதை போலவும்,
மாதவிலக்கு நின்றபிறகு சட்டென்று ரத்தப்போக்கு தொடங்குவதைப் போலவும் இருந்தது
அந்தக் காதல் என்கிறார்.
கலாச்சாரத்தையும்,
ஒழுக்க நெறிகளையும்
பெண்களின் மீது மட்டுமே சுமத்திய ஆணாதிக்கத்தின் எல்லாவற்றையும்
ஒரு படைப்பாளியாக
“என்கதை”யில்
கேள்விக்கு உரியவையாக்குகிறார்.
என் கணவரை
மிக ஆழமாக
நேசித்த போதிலும்
அவரால்
என்னை நேசிக்க
இயலவில்லை,
நேசிக்கத் தெரிந்த
ஒரு ஆண் மகனை
இன்று வரை கண்டதில்லை என்கிறார்.
பெண்ணின்
இருப்பும், மனமும்,
காம வேட்கைகளும்,
கனவுகளும்,
என்னவென்று
பகிரங்கப் படுத்துகிறார்.
அதுவரை பெண்ணின்
மனம் மட்டுமே
பேசப்பட்ட
இலக்கிய வெளியில்
பெண்ணின் உடலையும்,
அதன் சஞ்சார வேட்கைகளையும் வெளியரங்கமாக்குகிறார்.
காதலுக்கும்,
காமத்துக்கும்
புதிய விளக்கங்களை நிர்மாணித்து
உறவுகளின் பாசாங்கை திரைவிலக்கி காட்டுகிறார். அதற்கு தன்னையே
பலியிடவும் செய்கிறார்.
பருவ காலத்தில்
எனது மார்புகளைப்பற்றி முழுவதுமாக தெரிந்து வைத்திருந்தேன்.
நான்
பூப்பெய்தியபோது
குழந்தைகளை
பெறுவதற்கான
வளர்ச்சியை
அடைந்து விட்டதாக
என் அம்மும்மா
புரியவைத்தாள்.
அன்று முதல்
நான்கண்ட
வீரம் செறிந்த
ஒவ்வொரு ஆணையும்
எனது குழந்தைகளின்
வலுவான தந்தையாகவே பார்த்தேன்.
குந்தி மீது எனக்கு
பொறாமை ஏற்பட்டது
போட்டிபோட்டு
குந்தியை தோற்கடிக்க நினைத்தேன்.
தீராத வேட்கையுடனும், தன்னையே கடக்கும்
அதன் விழைவுடனும்,
அதன் ஒழுங்கீனத்தின் நிறங்களுடனும்,
கொந்தளிக்கும் மனநிலையோடு, உண்மையுணர்வுடன்
முழுமையாக வெளிப்படுத்துகிறார்.
என்கதையில்
கமலாதாஸின்
வாழ்க்கையே களம்,
அதில் தன்னை,
தனது உலகை,
அனுபவங்களை,
உணர்ச்சிகளை,
மனக் குமுறலை
அப்பட்டமாக
வெளிப்படுத்தினார்.
ஒரு பெண்
இப்படி எழுதலாமா,
என்று கொந்தளிக்கச்
செய்தார்கள்.
அவர்களுக்கெல்லாம்
இது என்கதை,
நடந்த உண்மைகளை சொல்லியிருக்கிறேன், அதைப்போலவே
நடந்திருக்க வேண்டிய உண்மைகளையும் சொல்லியிருக்கிறேன்
என்றார்.
என்ன உலகம் இது?
எல்லா
கேடுகெட்ட காரியத்தையும் செய்யலாம்.
அதைப் பற்றி
வெளியில் மட்டும் சொல்லக்கூடாது
என்கிறார்கள்.
அதற்கு
எதிரான கலகமே
மாதவிக்குட்டி என்ற கமலாதாஸின்
எழுத்து!!
நெருப்பின் நாக்குகளை
ஈரத் துண்டுகளால்
மூடவே முடியாது.
சமுதாயம்
உருவாக்கிய
கசாப்புக்கூடமே
ஒழுக்கநெறி!
உண்மையை கண்டு அஞ்சுபவர்களையும்,
பொய் பேசுபவர்களையும், கருக்கலைப்பு
செய்பவர்களையும்,
நீலிக் கண்ணீர் வடிப்பவர்களையும்,
ஒழுக்கம் என்ற
போர்வையில்
ஆணாதிக்கத்தை
பாதுகாக்கவே
சமுதாயம் முயல்கிறது!
ஒரு பெண்ணின்
இப்படிப்பட்ட
சுயசரிதையை
நீங்கள்
வாசித்திருக்கவே
முடியாது!!
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
ART.நாகராஜன்,
புத்தக வாசல், மதுரை.