இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

OLAICHUVADI THIRUKKURAL ENGLISH
சைதன்யர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
காதல்: சிகப்பு காதல்...
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
ஆரஞ்சு முட்டாய்
மௌனி படைப்புகள்
யாசுமின் அக்கா
பாரதிதாசனும் நகரத்தூதனும்
அண்ணாவின் மேடைப்பேச்சு
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
அவரை வாசு என்றே அழைக்கலாம்
கனவுகளின் மிச்சம் - ஓர் அறிவுஜீவியின் தன்வரலாறு
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
காலந்தோறும் பெண்
விந்தையான பிரபஞ்சம்
இன்னொருவனின் கனவு
ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு
இலக்கணச்சுடர் இரா. திருமுருகன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
திருவாசகம்-மூலமும் உரையும்
செம்பருத்தி
கஷ்ட நிவாரண ஆபதுத்தாரண ஸ்ரீ மஹா காலபைரவர் ஆராதனையும் உபாஸனையும்
முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை
தொழிலகங்களில் பாதுகாப்பு
சாண்டோ சின்னப்பா தேவர்
உரிமைகளின் காவலன்
வளமான சொற்களைத் தேடி
திருக்குறள் நெறியில் திருமாவின் வாழ்வியல்
பரஞ்சோதி முனிவர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெரியார் டிரஸ்ட்டுகள் ஒரு திறந்த புத்தகம்
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இனி போயின போயின துன்பங்கள்
வேமனர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இராவணன் வித்தியாதரனா?
ஒரு விரல் புரட்சி
மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்
பசுவின் புனிதம்
பெண் மணம்
உடல் - பால் - பொருள் (பாலியல் வன்முறை எனும் சமூகச்செயற்பாடு)
மாஸ்டர் ஷாட் - 2
நலம் தரும் யோகம் (ஆசனம் -பிராணாயாமம் -தாரணை - தியானம்)
சுஜாதாவின் கோணல் பார்வை
யாக முட்டை
ரப்பர்
கள்ளிமடையான் சிறுகதைகள்
ஒரு பிரயாணம் ஒரு கொலை
தலைவலி: பாதிப்புகளும் தீர்வுகளும்
வசந்தத்தைத் தேடி
எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
சீர்மல்கு காரைக்கால்
யுகத்தின் முடிவில்
மீனின் சிறகுகள்
சோழர் வரலாறு
நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
விலங்குகளும் பாலினமும்
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 1)
ஓடை
பஞ்ச நாரயண கோட்டம்
மொழிப் போரில் ஒரு களம்
சில கருத்துகள் சில சிந்தனைகள்
டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள்
பட்டாம்பூச்சி விற்பவன்
இனியவை நாற்பது
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
இந்தியா: நள்ளிரவு முதல் புத்தாயிரம் ஆண்டு வரையிலும் அதற்கு அப்பாலும்
ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்
பார்த்திபன் கனவு
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
கோயிற்பூனைகள்
சுதந்திரத் தமிழ்நாடு ஏன்? 


Reviews
There are no reviews yet.