Kuttichuvar Sindhanaikal
மன அழுத்தமும் புறச்சூழலும் இறுக்கி வைத்திருக்கும் மனிதர்களைச் சிரிக்கவைப்பது சிரமம்; சிரித்த பிறகு அதை நினைத்துச் சிந்திக்கவைப்பது அதைவிட சிரமம். ஆனால் இந்த இரண்டையும் இணைந்து செய்தவர்களுக்கென இந்த மண்ணில் பெரிய பாரம்பரியமே உண்டு. கலைவாணர் முதல் அந்தப் பரம்பரை ஆரம்பிக்கிறது. அதற்கு நுட்பமான புரிதல் வேண்டும்; தினம் தினம் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாதவர்கள், கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போய்விடுவார்கள்.
தமிழ் மக்களைத் தன் எழுத்தால் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்து வருபவர் ஆல்தோட்ட பூபதி. ட்விட்டர், ஃபேஸ்புக் எனச் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் இளைய தலைமுறை எழுத்தாளர்களில் நம்பிக்கை தரும் புது வரவு இவர். ‘குங்குமம்’ இதழில் வாரா வாரம் இவர் எழுதிவரும் ‘குட்டிச்சுவர் சிந்தனைகள்’ பகுதியிலிருந்து தேர்ந்தெடுத்த சில பகுதிகளின் தொகுப்பே இந்த நூல். நகைச்சுவைக்குத் தமிழ்ச் சூழலில் பெரும் பஞ்சம் இருக்கிறது; நகைச்சுவை புத்தகங்களுக்கும் அந்தப் பஞ்சம் நீடித்திருக்கிறது. இந்த இரண்டு பஞ்சங்களையும் தீர்க்கும் பெருமழையாக இந்த நூலைக் கருதலாம்.
சினிமா முதல் செல்போன் வரை, கிரிக்கெட் மேட்ச் ஃபிக்ஸிங் முதல் டிராஃபிக் போலீஸ் வரை ஆல்தோட்ட பூபதியால் கிண்டலடிக்கப்படாத கேரக்டர்களோ, மனிதர்களோ இல்லை. மனதை லேசாக்கிக்கொள்ள எல்லோரும் திரும்பத் திரும்பப் படிக்க வேண்டிய நூல் இது!

தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1						
Reviews
There are no reviews yet.