LEE KUAN YEW
லீ குவான் யூ வழக்குரைஞர் பட்டம் பெற்றது கேம்பிரிட்ஜில். அங்கிருந்த பேராசிரியர்கள் இனபேதம் பார்க்கவில்லை. ஆனால் விளையாட்டுதிடல்,பேருந்து,உணவு விடுதி, வியாபார ஸ்தலங்கள் இங்கெல்லாம் மற்றவர்களால் ஆசியர்கள் நடத்தப்பட்ட விதம் கொண்டு லீ கொதித்தார். என்னதான் இங்கிலாந்தின் கட்டுப்பாடும் ,நாகரிகமும், பண்பாடும் அவரை ஈர்த்தாலும் பிரிட்டிஷ் இன வெறியர்கள் நடந்து கொண்ட விதம் அவரைத் தீவிர அரசியலை நோக்கி நகர்த்தியது.பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு ,இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திர நாடுகளாக அறிவிக்கப்பட்டதிலிருந்து அவர்களின்,வேட்கையும் வேகமும் அதிகரித்த விதம் அவருக்கு நம்பிக்கையை ஊட்டியது. சிங்கப்பூரில் அப்போதைக்கு ஆட்சியில் இருந்த அரசியல் கட்சி, ஏழைகளின் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்ததை அவர் ரசிக்கவில்லை. அதற்காக கம்முனிச சித்தாந்தத்தையும் அவர் ஏற்கவில்லை. மாற்று அரசியலை முன்வைக்க முடிவு செய்து மக்கள் செயல் கட்சியை (Peoples Action Party) நிறுவி ஆட்சியைப் பிடித்தார். 31 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமராக இருந்த காலத்தில் தரைமட்டமாகக் கிடந்த சிங்கபூரை வானுயர்ந்த கோபுரமாய் மாற்றி அமைத்தார். சிங்கப்பூர் உலக வர்த்தகத்தின் மையபுள்ளியானது இவரது தீர்க்க தரிசனத்தால்தான். நவீன சிங்கப்பூரின் ஒவ்வொரு அங்குலமும் இவருடைய பெயரைத்தான் ஜெபித்துக் கொண்டிருக்கிறது. தேசத் தந்தையாக சிங்கபூர் மக்களால் போற்றப்படுகிறார் லீ குவான் யூ. அவரது வாழ்க்கையின் அடிநாதமாக இருக்கும் முக்கியமான விஷயங்கள் அனைத்தும் இந்த நூலில் நான்கு பாகங்களில் விவரிக்கப்பட்டிருக்கிறது. லீ குவான் யூவின் ஆரம்ப வாழ்க்கை தொடங்கி அவருடைய கல்வி, அரசியல் நுழைவு, அவருடைய இலக்கு, அதை அடைய அவர் எதிர்கொண்ட சவால்கள், அவருடைய கம்யூனிஸ எதிர்ப்பின் பின்னணி ,தமிழர்கள் மீது அவர் அன்புகாட்டுவதற்கான காரணம் இவை அனைத்துக்கும் விடை சொல்கிறது இந்தப் புத்தகம்.
Reviews
There are no reviews yet.