மாநில சுயாட்சி ஏன்?

Publisher:
Author:

100.00

மாநில சுயாட்சி ஏன்?

100.00

மக்கள் அமைதியாகவும் நம்பிக்கையுடனும் வளமாகவும் வாழ்வதற்கு வழிகாட்டுவது நல்லதோர் ஆட்சி முறை. ஆட்சி
என்பது மக்கள் நலங்கருதி அனைவருக்கும் பொருந்தும் வகையில் சட்டங்கள் இயற்றிச் செயல்படுத்தும் ஒரு பொது அமைப்பு. இந்தியாவைப் போன்ற ஈரடுக்கு ஆட்சி முறை நிலவுகின்ற
நாட்டில் சட்டங்களை இயற்றிச் செயல்படுத்துவது சிக்கலான
முறையாகும். இங்குள்ள மக்கள் இடத்தாலும் மொழியாலும் சமயத்தாலும் வாழ்க்கை முறையாலும் வேறுபட்டவர். மேலும் இந்தியா மிகப்பரந்த ஒரு தேசம். மைய அரசு மாநில அரசு என்ற நிலையில் அந்தந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு அவர்களுடைய அடிப்படை வசதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனில் சுயமாக இயங்குகின்ற மாநில ஆட்சி முறை வேண்டும் தன்னாட்சியுடன் இயங்கும் மாநில அரசுகளை ஒருங்கிணைக்கும் வகையில் மைய அரசு செயல்பட வேண்டும். மாநில மக்களின் தேவைகளைச் சரிவர நிறைவேற்ற வேண்டுமெனில் மாநில ஆட்சித் தன்னாட்சியுடையதாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருப்பதே மாநில சுயாட்சி ஏன்? என்னும் இந்த நூல். புதிய நிலையில் புரிந்துணர்வோடு வழிகாட்டும் நூல்.

Delivery: Items will be delivered within 2-7 days