மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு

Publisher:
Author:

210.00

மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு

210.00

Mobile Journalism

Cyber Simman

 

செல்பேசி இதழியல் என்பது, களத்தில் நடக்கும் நிகழ்வுகளை எளிதாகவும், விரைவாகவும் படம் பிடித்து வெளியிட ஸ்மார்ட் போன்கள், செயலிகள், சமூக வலைப்பின்னல் சேவைகள் மற்றும் இணைய வசதி ஆகியவை இணைந்து அளிக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதாகும்.
 யார் வேண்டுமானாலும் செல்போன் மூலம் செய்திகளைப் பிறருக்குப் பரப்பலாம் என்ற நிலை இருப்பதால், அதற்கான அடிப்படைகளை வரையறுத்து விளக்குவதும், அவற்றை ஒழுங்குபடுத்துவதும் அவசியமாகிறது. அந்த அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
 செல்பேசியின் மூலம் படம் எடுக்கும் முறைகள், எடுக்கப்பட்ட காட்சிகளை எடிட் செய்வது ஆகிய செல்பேசி இதழியலின் அடிப்படைகளை மிக விரிவாக இந்நூல் விளக்குகிறது.
 செல்பேசி மூலம் எடுக்கப்பட்ட படங்களை வெளியிடும் முறைகளும், செல்பேசி இதழியலுக்குப் பயன்படும் இணையதளங்கள், நூல்கள் பற்றிய தகவல்களும் உள்ளன.
 பிற படப்பிடிப்புச் சாதனங்கள் எதுவுமில்லாமல், செல்போனில் எடுக்கப்பட்ட படங்களை நேரடியாக ஒளிபரப்பியவர்களைப் பற்றியும், அவ்வாறு ஒளிபரப்பத் தேவைப்படும் செயலிகள் பற்றியும் இந்நூல் கூறுகிறது. நவீன இதழியல்முறைக்கான விரிவான கையேடு.

நன்றி – தினமணி

Delivery: Items will be delivered within 2-7 days