Be the first to review “முள்ளிவாய்க்கால் முடிவல்ல..”
You must be logged in to post a review.
Original price was: ₹600.00.₹560.00Current price is: ₹560.00.
Out of stock
2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் இலங்கைத் தமிழர்களுக்கு மிகப் பெரியப் பின்னடைவு ஏற்பட்டது. பல லட்சக்கணக்கானோர் உயிர் இழந்தனர். பல்லாயிரக் கணக்கான தமிழ் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டனர். பல லட்ச ஈழத் தமிழர்கள் தங்களின் சொந்த மண்ணை இழந்து ஏதிலிகளாக்கப்பட்டனர். மனிதகுல வரலாற்றிலேயே சந்தித்திராத அந்த சோக நிகழ்வால் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் சோகத்தில் மூழ்கினர். தமிழ் இனத்தின் பெயரால், உரத்த குரலில் உணர்ச்சிப் பொங்க பேசி, தங்களின் வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்ட, பதவி சுகங்களை வசப்படுத்திக் கொண்ட மாபெரும் மனிதர்கள் எல்லாம் வாயடைத்துப்போய் தாங்களே மௌனித்துக் கொண்டார்கள்.
எவ்வளவு காலம்தான் இந்த சோகத்திலேயே மூழ்கி இருப்பது. எதிர் காலத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டாமா?
இக்கேள்விகளுக்கு விடை காண்பதற்கு ‘முள்ளிவாய்க்கால் முடிவல்ல’ என்ற தலைப்பில் நடந்த நேர்காணல் நிகழ்ச்சியின் நீட்சிதான் இப்புத்தகம்.
ஒரே தலைப்பில் 18 நாட்கள் 18 பிரபலங்களுடன் நடத்தப்பட்ட ஒரே சாதனை நேர்காணல் இதுதான். எதிர்காலத்தில் வீழ்ச்சியில் இருந்து இந்தத் தமிழினம் மீண்டும் ஒரு நாள் வெற்றியைச் சுவைக்கும். அந்த ஆனந்த வேளையில் பேசமுடியாத பலவற்றை இந்த புத்தகம் பேசும். அந்தச் சாதனையை கருவில் சுமந்து செயல்படுத்தி புதிய விடியலுக்கான பொறியை உருவாக்கும் இப்புத்தகம்.
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.