Nalvaazhvu Pettagam
‘வெண்டைக்காய் சாப்பிட்டா கணக்கு நல்லா போடலாம்…’
கேரட் சாப்பிட்டா கண் நல்லா தெரியும்!’
‘கீரை சாப்பிட்டா பலசாலி ஆகலாம்…’
இப்படி அம்மாக்கள் கரடியாகக் கத்தலாம். ஆனாலும், ஒருசில காய்கறிகளைத் தவிர குழந்தைகளை காய்கறிகள் சாப்பிடப் பழக்குவது என்பது எந்த அம்மாவுக்கும் இதுவரை கைவராத வித்தை! எந்தக் காயையும் கூட்டு, பொரியலாக சாப்பிட அடம் பிடிக்கிற குழந்தைகளையும், சில பெரியவர்களையும், அவற்றைச் சமைக்கிற விதங்களில் வேறுபாடு காட்டுவதன் மூலம் மாற்ற முடியும். எந்தெந்த காயில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன, அந்தச் சத்து குறையாமல் சுவையாக சமைப்பது எப்படி என வழிகாட்டவே இந்தப் புத்தகம்.
குட்டியூண்டு சுண்டைக்காயில் தொடங்கி, பிரமாண்ட பூசணிக்காய் வரை ஒரு காய்கறி மார்க்கெட்டையே இதில் கடை விரித்திருக்கிறோம். அந்தந்த காயின் நலன்களை, சுவையான சமையல் குறிப்புகளுடன் உங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள் முன்னணி ஊட்டச்சத்து நிபுணர்களும் சமையல்கலை நிபுணர்களும். இனி நீங்களும் ஆரோக்கியம் அளிக்கும் கிச்சன் டாக்டர்தான்!.

கனம் கோர்ட்டாரே! 
Reviews
There are no reviews yet.