ஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள்

Publisher:
Author:

120.00

ஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள்

120.00

Oru Kutti Bhoorsvavin Anubavankal

Vannanilavan

தமிழின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவரான வண்ணநிலவனின் கட்டுரைகளும் நேர்காணல்களும் அடங்கிய தொகுப்பு. ஒரு படைப்பாளியின் பார்வை ஒளியிலிருந்து வெளிப்படும் அவதானிப்புகளும் சிந்தனைகளும் நினைவுகளும் எண்ணவோட்டங்களும் கொண்டது.

தன் கால அரசியல்-சமூக நிகழ்வுகளையும் கலை-இலக்கியச் செயல்பாடுகளையும் ஆளுமைகளையும் பற்றிய இவருடைய இப்பதிவுகள் பல்வேறு உணர்ச்சிகளோடும் மனநிலைகளோடும் வெளிப்பட்டிருக்கின்றன. சமயங்களில் உரத்தும், சமயங்களில் சகஜமாகவும், சமயங்களில் சன்னமாகவும் ஒலிக்கும் இவருடைய குரல், அதன் எல்லா நிலைகளிலும் தெளிந்தும் தீர்க்கமாகவும் வெளிப்படுகிறது. இப்பதிவுகளில் அவருடைய எவ்வளவோ உணர்ச்சிகளும் மனநிலைகளும் ஊடாடிக் கிடக்கிறபோதிலும் – கோபம், வெறுப்பு, அலுப்பு, சலிப்பு, ஆதங்கம், ஆற்றாமை உட்பட – கசப்பு என்பது மட்டும் அறவே இல்லை. வண்ணநிலவனின் இந்த மேலான தன்மைகளிலிருந்துதான் அவருடைய பதிவுகளும் மேன்மை பெற்றிருக்கின்றன.

Delivery: Items will be delivered within 2-7 days