பாளையங்கோட்டையின் அண்மைக்கால வரலாற்றை இந்த நூல் பேசுகிறது. தான்சானியா நாட்டில் வேலை பார்த்த மகன் அனுப்பிய பணத்தில், ரயில்வே தண்டவாளத்திற்கு அடுத்து இருந்த காலியிடங்களை வாங்கிப்போட்ட தியாகராஜன் என்பவர் பின்னாளில் இடங்களை குறைந்த விலைக்கு விற்றதால், அவர் பெயரில் உருவானது தியாகராஜநகர். கூட்டுறவுச் சங்கத்திற்கு குறைந்த விலைக்கு இடம் தந்து உதவிய பெருமாள் என்பவரின் நினைவாக உருவாகியது பெருமாள்புரம். இதே போல, பாளையங்கோட்டை சேர்மன் மகாராஜா பிள்ளை காலத்தில் உருவாகியது மகாராஜாநகர். இத்தகைய வரலாறுகள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிறுசேமிப்பில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற திருநெல்வேலி மாவட்டத்திற்கு கிடைத்த ஊக்கத்தொகையில் அமைக்கப்பட்ட சாந்திநகர் மணிக்கூண்டு உள்ளிட்ட புதிய தகவல்கள் இந்த நூலில் ஏராளம் உள்ளன. போலவே, 1960முதல் 70கள் வரையிலான பாளையங்கோட்டையின் கவனிக்கத்தகுந்த அசைவுகளை மனம்முழுக்கப் பூசிக்கொள்கிற சுகத்தை இந்நூலில் நீங்களும் அனுபவிப்பீர்கள். சாந்திநகர், கேடிசி நகர், சமாதானபுரம், மனகாவலம்பிள்ளைநகர், பாளை மேட்டுத்திடல், பெருமாள்புரம், ஏ.ஆர்.லைன், பாளை வடக்கு பஜார், தெற்குபஜார், வ.உ.சி திடல், ஜவஹர் திடல், நூற்றாண்டு மண்டபம், காளிமார்க், முருகன் குறிச்சி, மூளிகுளம், பிராந்தான்குளம், கக்கன் நகர், கோட்டூர் ரோடு, கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, மேலப்பாளையம் என இன்றுள்ள பாளையங்கோட்டையின் பிராந்தியங்கள் அத்தனையும் அன்றைக்குக் காலக்கட்டத்தில் எப்படியெப்படியெல்லாம் இருந்தது.. உருவானது என்பதையும், இந்த மண்ணில் வேர்பிடித்து தேசங்களும் திரைகளும் கடந்து ஆல்பிடித்த ஆளுமைகள், கல்விநகரமான பாளையில் தொழில் வளர்த்தவர்கள், கல்விமான்கள், நகரசபை நிர்வாகிகள், அவர்களது காலக்கட்டங்களில் நடந்த ரசமான சம்பவங்கள்.. என்று பல சுவாரசிய அனுபவங்கள் இந்நூலில் உங்களுக்குக் காத்திருக்கின்றன.
பாளையங்கோட்டை நினைவலைகள்
Publisher: ஜீவா படைப்பகம் Author: ப. இசக்கிராஜன்₹220.00
Palayamkottai Ninaivalaigal
Delivery: Items will be delivered within 2-7 days
Description
Reviews (0)
Be the first to review “பாளையங்கோட்டை நினைவலைகள்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.