பம்மல் சம்பந்தனார் நாடக ஆளுமை, சிறுகதையாளர், பேசும்பட ஆளுமை எனப் பன்முகங்கள் கொண்டவர். அவருக்கிருந்த ஆங்கிலப் புலமை, பல்துறை ஈடுபாடு காரணமாகத் தமிழுலகிற்குப் பல்வேறு படைப்புகள் அவர் வழி கிடைத்துள்ளன. பேசும்படத் துறை சார்ந்த ‘தமிழ் பேசும்படக் காட்சி’, ‘பேசும்பட அனுபவங்கள்’ ஆகிய இரு நூல்களையும் ஒருசேர இணைத்து, ‘பம்மல் சம்பந்தனார்; பேசும்படத் தொழில் நுட்பங்கள் அனுபவங்கள்’ என்பதாக இந்நூல் பதிப்பிக்கப்படுகின்றது. இதை வாசிப்பவர்களுக்குப் பேசும்படம் சார்ந்த தொழில்நுட்ப அறிவும், பம்மல் சம்பந்தனார் பேசும் படத்துறையில் செயலாற்றியபோது, அவர் எதிர்கொண்ட சிக்கல்கள், அவற்றிலிருந்து அவர் எவ்வாறு மீண்டார்? அவர் கற்றவை எனை? போன்றவற்றை அறியும் அனுபவமும் ஒரு சேர வாய்க்கும். அதோடு, தொடக்க காலத் தமிழ் பேசும்படங்களின் போக்குகளையும் அக்காலத்தில் இத்துறை சார்ந்த தொழில்நுட்ப அறிவின் நிலைலயயும் அறிந்துகொள்ள இந்நூல் உதவும்.
Sale!
பம்மல் சம்பந்தனார் (பேசும்படத் தொழில்நுட்பங்கள் – அனுபவங்கள்)
Publisher: புலம் பதிப்பகம் Author: கோ.பழனிOriginal price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.