Pirantha Naal Kovilkal
எண்கள்தான் தனி மனிதனின் எதிர்காலம் முதல், நாட்டின் எதிர்காலம் வரை அத்தனை விஷயங்களையும் முடிவு செய்யும் சக்தியாக இருக்கிறது என்கிறது ஜோதிடம்.
மனித இயக்கத்தை முடிவு செய்யும் 9 கோள்கள் இந்தியர்களுக்கு அடிப்படை என்றால்… உலக மக்களின் எதிர்காலத்தை எப்படி கணிப்பது?
எண்களின் சக்தி, அவை வெளிப்படுத்தும் ரகசியம் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக கவனித்த பின்னர் உருவானது நியூமராலஜி எனும் எண் ஜோதிடம். இது உலகம் முழுவதற்கும் பொதுவானதாக தயாரானது. மனிதன் பிறந்த தேதியைக் கணக்கிட்டு அதை பிறப்பு எண் என்றும், தேதி, மாதம், வருடம் அனைத்தையும் கூட்டி வரும் கூட்டுத் தொகையை விதி எண் என்றும் சொல்கிறது நியூமராலஜி. ஆனால், இந்த நூல் நியூமராலஜியை மட்டும் மையமாகக் கொண்டதல்ல. எந்த ஒரு மாதத்தில் பிறந்திருந்தாலும், பிறந்த தேதியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, அந்த தேதியில் பிறந்தவர்களின் குணநலன்கள், அவர்களுக்கான பலன்கள், அவர்கள் வாழ்வு வளம் பெறுவதற்கு தரிசிக்க வேண்டிய கோயில்கள், வணங்க வேண்டிய கடவுள்கள், சொல்ல வேண்டிய மந்திரங்கள் என துல்லியமாக வகைப்படுத்திச் சொல்கிறது. ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன், இதில் தன் வாழ்நாள் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
பொதுவாக 1 முதல் 9 வரையுள்ள எண்களுக்கு கூட்டுத் தொகையை வைத்துக் கொண்டு பலன் சொல்லி வந்த எண் ஜோதிட உலகில், 1 முதல் 31 தேதி வரை பிறந்த அனைவருக்கும் பிரத்யேகமாக பலன்களைச் சொல்லி இருப்பது இந்த நூலின் தனித்துவம். இந்நூல் ஒரு வீட்டில் இருந்தால், வீட்டிலுள்ள அத்தனை பேருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் வழிகாட்டும் ஒளியாக திகழும் என்பது நிச்சயம்.

ஸ்ரீ கந்தர் சஷ்டிக் கவசங்கள் ஆறு படை வீடுகளுக்கும் உரியவை ஸ்ரீ திருச்செந்தூர் கவசம் உரையுடன் ஸ்ரீ சண்முகக் கவசம் உரையுடன் ஸ்ரீ கந்தர் அநுபூதி உரையுடன்
கலைஞர் எனும் கருணாநிதி 
Reviews
There are no reviews yet.