சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)

Publisher:
Author:

100.00

சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)

100.00

Sabarimalai Yathirai Oru Vazhikatti

 

இறை அவதாரம் என்றாலே அற்புதம் நிகழ்த்துவதாகத்தான் இருந்திருக்கிறது. ராமன், கிருஷ்ணன் போன்ற அவதாரங்கள் மனித இயல்பையும் மீறி பல அதிசயங்களை நிகழ்த்தியிருக்கின்றன. இந்த அதிசயங்கள் எல்லாம் வெறும் பிரமிப்புக்காக மட்டுமல்ல, குறிப்பிட்ட அவதார நோக்கத்தை வலியுறுத்துவதற்காகவும்தான். அந்த நோக்கத்தின் அடிநாதம், தீமைகள் அழிய வேண்டும் என்பதுதான்.

 

தீய சிந்தனைகள், தீய செயல்கள் எல்லாவற்றையும் தீயிட்டுப் பொசுக்க வேண்டும் என்ற வேட்கையின் வெளிப்பாடுதான் இந்த அவதாரங்களின் நோக்கங்கள். இதை ஐயப்ப அவதாரத்திலும் உணரமுடியும். இந்த தத்துவத்தை எளிமையாக விளக்குகிறது இந்த நூல். உரையாடல் பாணியில் பல சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறது. கடுமையாக தவமிருந்து வரம் கேட்கும் அரக்கிக்கு அவ்வாறு வரம் கொடுத்ததோடு, அவளுடைய தீய எண்ணங்களை அறவே அழித்துவிடுமாறு பிரம்மன் அறிவுறுத்துவது – மகிஷமுகியின் கோபம் – துர்வாசரின் சாபம் – பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்கப்படவேண்டிய கட்டாயம் – மஹாவிஷ்ணு மோகினியாக அவதாரம் எடுக்க வேண்டிய அவசியம் – சிவ, விஷ்ணு அம்சமாக ஹரிஹரசுதன் அவதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் – அப்படிப் பிறந்த குழந்தை பிரம்மனின் வரம் பெற்ற அரக்கியை அழிக்கும் சம்பவம் என்று ஒரு புள்ளியில் ஆரம்பித்து, பல இணை சம்பவங்களை உட்புகுத்தி மீண்டும் அந்தப் புள்ளியிலேயே முடியும் அற்புதமான சரிதம் இது.

 

பாற்கடலைக் கடைய உதவிய வாசுகி பாம்பு, பின்னாளில் தன் வாரிசுகளை சிவபெருமானுக்கு அணிகலன்களாக விளங்கச் செய்தது; ஸ்வாமி ஐயப்பன் புலிமீது வந்ததற்கான நயமான விவரிப்பு; ஸ்வாமி வித்தியாசமாய் அமர்ந்திருக்கும் கோலத்திற்கான விளக்கம், துளசி மணி, இருமுடி மற்றும் பதினெட்டுப் படி தத்துவம், சபரிமலையில் ஸ்வாமி கோயில் திறந்திருக்கும் நாட்கள்-நேரங்கள், ஸ்வாமி ஐயப்பன் ஸ்தோத்திரப் பாடல்கள், மந்திரங்கள் என்று பல தகவல்கள்…

 

கன்னிசாமிகளுக்கு மட்டுமல்ல; மூத்த சாமிகளுக்கும் உகந்ததோர் வழிகாட்டி, இந்தப் புத்தகம்.

 

Delivery: Items will be delivered within 2-7 days