சட்டக்கல்லூரித் தமிழ்க் கழக அமைச்சர் தோழர் வேணுகோபாலன், தலைவரைப் பிரேரேபிக்கையில் “பெரியோர்களே! தமிழருக்குச் செல்வம் போன்ற கம்ப இராமாயணம், பெரிய புராணம் ஆகிய நூற்களைக் கொளுத்த வேண்டும்; அல்லது அழிக்க வேண்டும் என்று பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்கள் கூறியது கேட்டு தமிழ் மக்கள் கோபம் கொள்வது இயற்கை. ஆனால் சுயமரியாதைக்காரர்களின் தீர்மானத்தைப் புறக்கணிப்பது கூடாது. ஆகவே, அதுபற்றி அவர்களின் கருத்தை அறியத் தோழர் சி.என். அண்ணாதுரை அவர்களை அழைத்துள்ளோம். அவர் இந்திரசித்துக்குச் சமம் என்று கூறுவேன். அவருரையை மறுத்துப் பேசத் திருவாளர் சேதுப்பிள்ளை அவர்கள் இராமபிரான் போல் வந்திருக்கிறார்கள். இதற்கு நடுநிலைமையாளராக இருக்க, ஜனக மகாராஜனைப்போல உயர்திரு இராமச்சந்திரஞ் செட்டியார் அவர்கள் வந்திருக்கிறார்கள். விவாதம் மிக மேலான முறையினதாக இருக்கவேண்டுமென விழைகின்றேன் என்று கூறினார். (நூலிலிருந்து )
Reviews
There are no reviews yet.