2 reviews for திருடன் மணியன்பிள்ளை
Add a review
You must be logged in to post a review.
Original price was: ₹690.00.₹665.00Current price is: ₹665.00.
செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்க வைப்பவை; சாகசத் தன்மை கொண்டவை. போலீசில் பிடிபட்டதுமே உண்மைகளை ஒப்புக்கொண்டுவிடுகிற இவர், தன் மீதான வழக்குகளுக்கு வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளாமல் தானாகவே வாதாடுவார். இவரது குறுக்கு விசாரணைகள், போலீஸ் அதிகாரிகளும் நீதிபதிகளும் பயப்படுமளவுக்கு அமைந்திருக்கும். ஒருபுறம் மனிதத்தன்மையற்றதாக இருக்கும் இவரது செயல்பாடுகளினுள் ஏழைகள் மீதான உள்ளார்ந்த பரிவும் இடைகலந்திருக்கும். திருவனந்தபுரத்திலிருந்து ஒரு முஸ்லிம் பெண்ணை வாழ்க்கைத் துணையாகச் சேர்த்துக்கொண்ட இவர் ஒரு கட்டத்தில் திருடிய பொருளுடன் குடும்பத்தோடு மைசூருக்குச் சென்று வீதியோரத்தில் பாயாசக் கடை தொடங்குகிறார். பிறகு சலிம் பாஷா எனும் பெயரில் அங்கே புகையிலை விவசாயத்தில் ஈடுபட்டு ஏழைப் பங்காளன் எனப் பெயர் பெறுகிறார். பிறகு மைசூரில் இவரது வளர்ச்சி கர்நாடக மாநில முதலமைச்சருடன் சேர்ந்து ஹெலிகாப்டரில் பறக்கும் அளவுக்கு முன்னேறுகிறது. மக்களவைத் தேர்தலில் ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுகிறார். மக்கள் செல்வாக்கு மிகுந்தவரும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவருமாக இருப்பதால் ‘மாண்புமிகு’கூட இவரது கைக்கெட்டும் தூரத்தில் வந்து நிற்கிறது. இந்நிலையில், இவர் மைசூரிலிருக்கும் தகவலைக் கேள்விப்பட்டு வந்த கேரளக் காவல் துறை இவரைக் கைது செய்கிறது. ஒரே இரவுக்குள் சம்பாதித்த அத்தனைச் செல்வங்களையும் இழந்துவிட்டு வெறுங்கையுடன் கேரளத்திற்குக் கொண்டுவரப்படுகிறார் மணியன்பிள்ளை.
Delivery: Items will be delivered within 2-7 days
ART Nagarajan –
திருடன் மணியன் பிள்ளை
காலச்சுவடு
ஜி.ஆர். இந்துகோபன்
தமிழில். குளச்சல் மு யூசுப்.
அபாயகரமான புத்தகம் இது!
வாசிப்பிலிருந்து
மீளவே முடியாத புத்தகம்.
2018ம் ஆண்டில்
“சாகித்ய அகாடமி”
விருதைப் பெற்ற புத்தகம்!
நிலப்பிரபுத்துவத்திற்கும்
முதலாளித்துவத்திற்கும் எதிரான எதிர்புரட்சியே திருட்டு!
செய்யாத குற்றத்திற்கு
சிறை சென்றதால்,
அங்கிருந்தே
இவரது குற்றச் செயல்கள் துவங்குகிறது.
திருடுவதற்காக
இவர் கையாள்கிற மதிநுட்பம் பற்றி அவரே விவரிப்பது ஆச்சர்யம்!
இருநூறு திருட்டு வழக்குகள்,
மைசூரில் கோடீஸ்வரனாக, ஜனதா கட்சியில் கர்னாடகத்தில் எம்.எல்.ஏ வேட்பாளராக,
திருடிய நகைகள் தங்கம்தான்
என்பதை அறியும் மதிநுட்பம்,
திருட்டுக்கான தண்டனைகள், காவல்துறை நடவடிக்கைகள் பற்றிய தேர்ந்த முதிர்ச்சி,
சக சிறைக் கைதிகளின்
ரத்தம் சிந்திய அனுபவங்கள்,
ரத்னாகரன் என்ற திருடன் வால்மீகி என்ற மகாமுனிவனாகி இராமாயணம் எழுதியதை போல திருடன் மணியன் பிள்ளை
இந்தக் கதையை எழுதும் போது தன்னை, சமூகம்தான் திருடனாக்கியது என்கிறார்!
பசியும், உணவும் ஒன்றுக்கொன்று நெருங்காமல் எதிரெதிர் திசைகளில் இருந்தால்
திருட்டு என்பது ஒரு போராட்டமே!
நாய்கள் பயந்த சுபாவம் உடையவை, காடுகளில் மற்ற விலங்குகளோடு போராடும் திறன் இல்லாததால் மனிதர்களோடு கூட்டணி வைத்துக் கொண்டதாக மணியன் பிள்ளை கூறுகிறார்.
திருடும் வீடுகளில் உள்ள நாய்களை வைத்தே இப்படி கணிக்கிறார்.
590 பக்கங்களை வாசிக்கும் வேகம் என்பது
போலீஸின் கைகளில் சிக்காமல் மணியன் பிள்ளை தப்பி ஓடுகின்ற வேகம்!!
வாசிக்கும் போது திருடுவதற்காக அவர் இறங்கும் வீடுகளில் நாமும் இறங்கிவிடுகிறோம் காவல்துறை கொடுக்கும் அடிகளில் ரெண்டு நமக்கும் விழுகிறது!
மொழி பெயர்ப்புக்காக நண்பர்
குளச்சல் மு யூசுப் அவர்களுக்கு,
நாம் இந்த புத்தகத்தை வாங்கி
வாசிப்பதின் மூலம்
வாசகர்கள் விருதை
நாமே வழங்கி கெளரவிப்போம்!!
வாழ்த்துக்கள் தோழர்!
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
ART.நாகராஜன்,
புத்தக வாசல், மதுரை.
இல. வேந்தன் –
ஒவ்வொரு வீட்டிற்கும் திருடப்போகும் போது கூடவே நம்மையும் அழைத்து செல்வது போல் உள்ளது. லாக் டவுன் காலத்தில் வெளியே லாக் செய்யப்பட்ட வீடுகளை பார்க்கும் போது மணியன் சொன்ன சன்னல் கம்பி, பூட்டு, ஏணி, கதவு, மாடி இதெல்லாம் கண்ணில் வந்து போகிறது. திருடர்களை சமூகம் தான் உருவாக்குகிறது என்பதையெல்லாம் சொல்லி என்னை நியாயப்படுத்தி கொள்ளவில்லை என்று வாக்குமூலம் அளிக்கும் போது தான் செய்த தவறுகளை உணர்ந்து வேதனையடைகிறார். மணியம் அதை தலையெழுத்து என்று நம்புகிறார்.
பசிக்காக பன் திருடி திருடனாக மாறிவிட்டான் என்று நம் திரைப்படங்கள், தொடர்ச்சியாக ‘சமூகம்’ என்பதை வெறும் பன்னுக்குள்ளாகவும் பசிக்குள்ளாகவுமே சுருக்கி நமக்கு காட்டி ஏமாற்றுகின்றன. ‘சமூகம்’ என்றால் என்னென்ன புறக்காரணிகள் அருவமாக உள்ளன. அந்த அருவ புறக்காரணிகள் எவ்வாறு திருடர்களை உருவாக்கின்றன என்பதை விரிவாக மணியன் கதையில் நாம் உணரலாம். ஒரு திருடனுக்கு இவ்வளவு வியாக்யானம் தேவையா என்று சிலருக்கு தோன்றலாம்.
துணிச்சலாக தான் செய்ததை ஒரு படைப்பாக நம்முன் வைத்து அதன் மூலம் நாம் நம் முடிவுகளை எடுக்கலாம் என்கிற உரிமையையும் நமக்கு தருகிறார். மலையாள சினிமா விரைவில் இதை ஒரு திரைப்படமாக கொண்டு வருவார்கள் என்கிற நம்பிக்கையை சமீபத்திய மலையாள சினிமா நமக்கு தருகிறது.
என்ன ஒரு நக்கல் நையாண்டித்தனமான பேச்சு இந்த மணியனுக்கு. திருடப்போன வீட்டில் குளித்துவிட்டு தான் வரும் நல்ல பழக்கம். நாய்களை ஏமாற்றி எப்படி திருடுவது? சன்னலையும் கண்ணாடியையும் எப்படி லாவகமாக உடைப்பது? திருடுவதிலும் தனக்கே உருவாக்கி கொண்ட சினிமாபிம்பம் எதிக்ஸ் கட்டமைப்பு என்று மணியன் கதையை ஜி.ஆர். இந்து கோபன் மிக அருமையாக சுவையாக தொகுத்துள்ளார். அதில் கொஞ்சமும் சுவாரசியம் குறையாமல் குளச்சல் மு. யூசுப் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
இளகிய மனவுள்ளவர்கள் ஊரடங்கு முடியும் வரை இந்த புத்தகத்தை படிக்க வேண்டாம் . ஏனெனில் ‘நானும் ரவுடி தான்’ படத்தில், ஒரு ரவுடி விஜய் சேதுபதியை ‘ரவுடி தான் கெத்து’ என்று ரவுடி பற்றிய கவர்ச்சிகரமான மாய சிந்தனையை உருவாக்கியதை போல உங்களையும் மணியன் ‘திருடுவது தான் கெத்து’ என்று தவறாக உருவாக்க கூடும்.
சுவாரசியமான புத்தகம்..