தொலையுணர்வு

Publisher:
Author:

299.00

தொலையுணர்வு

299.00

தொலை உணர்வு எனும் அதிசய சக்தி நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. நம்முள் மறைந்து கிடக்கும் இந்த சக்தியை எப்படி வெளிக்கொண்டு வருவது என்பதையும், அதைப் பயன்படுத்தி எவ்வாறு நம்முடைய வாழ்க்கையை அதிஅற்புதமான ஒன்றாக மாற்றி அமைத்துக்கொள்வது என்பதையும் இப்புத்தகத்தில் ஜோசப் மர்ஃபி தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
அன்றாட வாழ்வின் சவால்களையும் இன்னல்களையும் பிரச்சனைகளையும் சோதனைகளையும் எதிர்கொண்டு அவற்றில் இருந்து வெற்றிகரமாக மீள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்கு கற்றுக் கொடுக்கும். உங்களுக்கு இருக்கின்ற அசாதாரணமான சக்திகளை உடனடியாக மூடுவதற்கு தேவையான சிறப்பு உத்திகளை இது உங்களுக்கு வழங்கும்.
உங்கள் ஆழ்மனத்தின் சக்தியை கைவச படுத்துவதற்கான நடைமுறை சாத்தியம் கொண்ட எளிய உத்திகளும் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும், அவற்றை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதற்கான விளக்கங்களும், இப்புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம் பெற்றிருக்கின்றன.
தங்களுடைய தொலை உணர்வு சக்தியைக் கொண்டு பயன் அடைந்துள்ள பலருடைய உண்மை கதைகள் இந்நூலில் பக்கத்திற்கு பக்கம் இடம்பெற்று உள்ளன.
அவை உங்களுக்கு கண்டிப்பாக ஊக்கமளிக்கும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளுக்கும் பொருத்தமான தீர்வுகளை தெரிந்து வைத்திருக்கின்ற ஒரு முடிவில்லா பேரழிவு உங்கள் ஆழ்மனதில் குடிகொண்டுள்ளது.
எளிய நடைமுறைக்கு சாத்தியமான வழிகளின் மூலம் அந்த பேரழிவை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்திக் கொள்ள இந்நூல் கண்டிப்பாக உங்களுக்கு உதவும்.

Delivery: Items will be delivered within 2-7 days