உன் கழுத்தைச் சுற்றிக் கொண்டு இருப்பது:
நைஜீரிய நாவலான பயாப்ஃராவை நோக்கி (Destination Biafra) யை தமிழில் மொழி பெயர்த்த நாட்களில் பூச்சியமச் செட்டா (நாவலாசிரியை) மட்டுமல்ல; அடிச்சி உட்பட பலரது எழுத்துக்களை உள்வாங்க வேண்டி இருந்தது. ஈழத்தைப் போலவே ரத்தக் களறிகளுடன்முற்றிலும் சிதைக்கப்பட்ட இக்போ இனத்தின் விடுதலைப் போராட்டம் பற்றி எழுதி முடிக்கவே முடியாது. இதோ மற்றுமொரு அற்புதம். அடிச்சியின் கதைகளை கல்குதிரையிலும், மணல்வீடு இதழ்களிலும் நான் ரவிச்சந்திரன் மொழி பெயர்ப்பில் வாசித்துள்ளேன்.
2009ல் வெளிவந்த ‘உன் கழுத்தை சுற்றிக் கொண்டிருப்பது (The Thing around your neck)’ தொகுதி முழுவதையுமே தமிழில் தற்போது பாரதி புத்தகாலயம் வெளியிடுவது மிகுந்த சிறப்பாகும். அடுத்து அவரது Half of the yellow sun நாவலையும் முயற்சிக்கலாம். மொத்தம் இந்த நூலில் பதிமூன்று கதைகள் உள்ளன. அமெரிக்க தூதரகம் கதை தான் என்னையும் என் இரவுகளையும் தின்றது. வேலை வின்ணப்பம், விசா என பிச்சைக்காரர்களை போல் அங்கே கறுப்பின பெண்கள் மொய்த்தெடுக்க வரிசையை ஒழுங்குசெய்ய சிப்பாய்கள் சாட்டையால் அடிப்பார்கள்.
முகத்தைக் கிழித்து ரத்தம் கொட்டக் கொட்ட எப்படியாவது அமெரிக்கா போய் விட இரத்தம் என்பது புதிய பனை எண்ணெய்போல சிவப்பாக பிசுபிசுப்பாக இருக்கும் எனும் வரிபோதும். ஆவிகள், தனித்த அனுபவம், நடுக்கம் போன்றவை நைஜீரியாவுக்கே உரித்தான அவல வாழ்வின் படிகள். ஒரு பயிற்சிக்காகவேனும் நம் சிறுகதை ஆசிரியர்கள் இக்கதைகளின் ஊடாக கருப்பின… உலகை ஒருமுறை தரிசிக்க வேண்டும்.
நன்றி – புத்தகம் பேசுது
Reviews
There are no reviews yet.